Saturday, February 22, 2014

பூண்டுப் பொடி.

உங்கள் இதயத்திற்கு  இதமான பொடி வகை ஒன்றை இங்கே பகிர்கிறேன்.
நான் இங்கே சொல்லப் போவது பூண்டுப் பொடி.

இதற்குத் தேவையானவை 

உரித்தப் பூண்டு  -  ஒரு கைப்பிடியளவு.

துவரம் பருப்பு --1 கப்.

சிவப்பு மிளகாய்--- சிறிது.( 3 அல்லது 4).

உப்பு  ---- தேவைக்கேற்ப .

எண்ணெய்----கால் டீ ஸ்பூன்


அடுப்பில் வாணலியை வைத்து  , சூடான பின் , துவரம் பருப்பு , மிளகாய்  வறுத்துக் கொள்ளுங்கள். பருப்பு  சிவக்க வறுத்து எடுத்து  கொள்ளவும். பின் அந்த வாணலியில் கால் டீஸ்பூன்  எண்ணெயை  ஊற்றி சூடாக்கவும். பின் பூண்டைப் போட்டு , உடனே அடுப்பை  அனைத்து விடவும். அந்த சூட்டிலேயே இரண்டு பிரட்டு பிரட்டவும். பூண்டு மிக மிக லேசாக வதங்கினால் போதும். 


மிக்சியில் முதலில், பருப்பு, மிளகாய் , உப்பு  எல்லாவற்றியும் போட்டு பொடித்துக் கொள்ளவும்.ரொம்பவும் நைசாகவோ அல்லது ரொம்பவும் கொரகொரப்பாகவும் வேண்டாம்.  முக்கால் வாசி மாவானால் போதும்.
கடைசியாக லேசாக வறுத்த பூண்டை  இந்தப் பொடியுடன் போட்டு  ஒரு நிமிடம் சுற்றவும்.  பின் எடுத்துக் கைகளினால் உதிர்த்து வைத்துக் கொள்ளவும். ரொம்ப நேரம் மிக்சியை  சுற்ற விட்டீர்கள் என்றால்  , பூண்டு  துவையலாகிவிடும்.  

பூண்டை விட பருப்பு அதிகம் இருக்க வேண்டும். அப்பொழுது தான்  பொடியாக சாதத்தில் கலக்கும் பதத்தில் வரும். 

சாதத்தோடு பூண்டுப் பொடி பரிமாறிப்  பாருங்கள்  அலாதியான ருசியுடன் , உங்கள் அன்புக்குரியவர்களின்  இதயத்தையும்  ஆரோக்கியமாகப் பாதுகாத்துக் கொடுக்கும். நீங்களும் சாப்பிட மறக்க வேண்டாம். உங்கள் இதயமும் பலப்படட்டும் .