Friday, May 1, 2015

கொத்தமல்லி துவையல்


கொத்தமல்லி துவையல் செய்யத் தேவையானவை:

கொத்தமல்லி - ஒரு  கைப்பிடி
வெங்காயம் - ஒன்று அல்லது இரண்டு.
பச்சை மிளகாய் - 2  அல்லது  உங்கள் காரத்திற்கேற்ப
புளி - நெல்லிக்காயளவு.
உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை:

கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம், புளி , உப்பு  எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். தேவைபட்டால்  தண்ணீர் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொத்தமல்லி, வெங்காயம் இரண்டையும் உங்கள் ருசிக்கேற்பக் கூ ட்டவோ, குறைக்கவோ  செய்யலாம்.

சாதத்திற்கு மட்டுமல்ல, இட்லி தோசைக்கும்  தொட்டுக் கொள்ளலாம்.
அபார ருசியாக இருக்கும்.

பி.கு:
கொத்தமல்லி துவையலில்......... வெங்காயமா என்று முகம் சுளிப்பவர்களுக்கு  காதைக் கொடுங்கள்,  ஒரு ரகசியம் சொல்கிறேன்.

மாமியார், மருமகளுக்கு  இந்தத் துவையலை செய்து கொடுத்தால் , 'என் மாமியார் போல் உண்டா' என்று மருமகள் சொல்வது நிச்சயம்.

மருமகள், மாமியாருக்கு செய்து கொடுத்தால் , 'இவள் என் மருமகள் இல்லை என் மகள்' என்று மாமியார் கொண்டாடுவது  கண்டிப்பாக நடக்கும்.

 என் அனுபவத்தில் கண்டது சொல்கிறேன். எடுத்துக்  கொள்வதும், கொள்ளாததும் உங்கள் இஷ்டம்.




துவையலை செய்து, உங்கள் மாமியாருக்கோ, மருமகளுக்கோ , குடும்பத்தினருக்கோ , சாப்பிடக் கொடுத்து , உங்கள் அனுபவத்தை என்னுடன்   பகிர்ந்து கொள்ளுங்களேன் .