Wednesday, December 20, 2017

எனர்ஜி பால்ஸ்!

உங்கள் குழந்தைகள் ஆரோக்கியத்தின் மேல் அக்கறைக் கொண்டவரா நீங்கள்? அப்படியெனில் இந்த வீடியோவை அவசியம் பாருங்கள் ....



நன்றி ! நன்றி ! நன்றி !

Friday, December 15, 2017

கோதுமை மாவு புட்டு.


உங்கள் குழந்தைகள் பள்ளி விட்டு  வந்ததும் என்ன தின்பண்டம் கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படிஎன்றால் இந்த செய்முறையைப் பாருங்கள்.....



நன்றி !நன்றி

Sunday, December 10, 2017

கிச்சன் டிப்ஸ் & ட்ரிக்ஸ் - 2.

இந்த வீடியோவில்  கிச்சன் டிப்ஸ்  சில பகிர்ந்துள்ளேன்.

பார்த்து உங்கள் மேலானக் கருத்துக்களை சொல்ல மறக்க வேண்டாம்.


  நன்றி !நன்றி

Wednesday, December 6, 2017

பிரெட் ஜாமூன் !

திடீர் விருந்தினரா? என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படி என்றால்இதைப்பாருங்கள்.....பிரெட் ஜாமூன் செய்து அசத்துங்கள்......



நன்றி ! நன்றி!

Sunday, December 3, 2017

ரத்னா ஹோட்டல் ஸ்டைல் சாம்பார்!

என்ன செய்தாலும், ஹோட்டல் சாம்பார் சுவையும் மணமும் வீட்டில்  செய்யும் சாம்பாரில்வரவில்லையே என்று சொல்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்காகவே  செய்தது  தான் இந்த வீடியோ......



நன்றி !நன்றி

Wednesday, November 29, 2017

கார்த்திகை அப்பம் !

நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

அஞ்சறைப் பெட்டிக்கு வந்த பின் அப்பம் சாப்பிடாமல் போகலாமா?

அப்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.....



நன்றி !நன்றி

Tuesday, November 28, 2017

சுக்கு கருப்பட்டி டீ

சில நேரங்களில் , அதுவும்  ஜலதோஷம் வந்து பாடாய் படுத்தும் நேரத்தில், சூடாக  சுக்கு  டீ  குடித்தால்  எத்தனை ஆனந்தமாக இருக்கும். ! அதிலும் கருப்பட்டி வேறு கலந்து விட்டால் ஆனந்தம் ஆனந்தமே !

அப்படிப்பட்ட ஒரு டீ  தான் இந்த வீடியோவில்



              செய்முறையை உங்கள் நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ளுங்கள்.....
                                                                      நன்றி.

Saturday, November 25, 2017

கல் சட்டியில் வத்தக் குழம்பு!

கல் சட்டி நாம் மறந்து விட்ட பாத்திரங்களில் ஒன்று. இப்பொழுது மீண்டும், அங்கங்கே  கடைகளில் தலைக் காட்டுகிறது. அதில் வத்தக் குழம்பு வைத்திருக்கிறேன்  பாருங்கள்......

      

                                                                       நன்றி ! நன்றி

Monday, November 20, 2017

கார சாரமான பச்சை மிளகாய் சட்னி

இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் போரடித்து விட்டதா?
குடும்பத்தினர் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா?  இந்த கார சார சட்னி செய்து பாருங்கள்.... உன்னைப் போல் உண்டா என்கிற புகழ்ச்சிக்கடலில் உங்களைத்  தள்ளி திக்கு முக்காட செய்து விடுவார்கள் பாருங்களேன்.....


                                                      நன்றி ! நன்றி

Saturday, November 18, 2017

குஷ்பூ இட்லி!

குஷ்பூ இட்லி செய்முறை வீடியோ.....

செய்து பார்த்து சொல்லுங்கள்.......


Thankyou! Thankyou!

Friday, November 17, 2017

கார சாரமான வெங்காய சட்னி!

இட்லி, தோசைக்கு பக்கத் துணையாக  காரசாரமான வெங்காய சட்னி.......நினைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறதே........

அந்த வெங்காய சட்னி செய்முறை தான் இந்த வீடியோவில் இருக்கிறது.....



Thankyou! Thankyou!

Wednesday, November 15, 2017

ஆளி விதைப் பொடி| Flax seeds idli podi.

Flax seeds  என்று அழைகப்படும்  ஆளி  விதை உடலிற்கு ஆரோக்கியப் பலன்கள் நிறைந்தது என்று பரவலாக பேசப்படுகிறது.  Omega3 fatty acids மற்றும் நார்சத்து நிறைந்து காணப்படும் இதை உபயோகித்து நாம் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் மிளகாய்  பொடி செய்யும் முறை பார்ப்போம்.

             

Thankyou

Monday, November 13, 2017

ஓட்ஸ் லட்டு !

ஓட்ஸின்  பயன்கள் நம் எல்லோருக்கும் தெரிந்ததே.  ஓட்ஸைக் கொண்டு ,, உப்புமா, கிச்சடி, கஞ்சி  எல்லாமே செய்து பார்த்திருக்கிறேன். அடை செய்யும் போது  கூட ஓட்ஸ் சேர்த்திருக்கிறேன்.
இன்று ஓட்சை வைத்து ரவா லட்டு மாதிரி , செய்து பார்த்ததில் மிக அருமையான  லட்டுகள் , பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் கிடைத்தன. மிக மிக எளிதான இந்த லட்டு செய்து சுவைத்து தான் பாருங்களேன்.




நன்றி ! நன்றி!

Friday, November 10, 2017

குழிப் பணியாரம்.!

இட்லி மாவில், இட்லி செய்யலாம், தோசை செய்யலாம்,..... குழிப் பணியாரம் செய்யலாமா?

இதோ செய்திருக்கிறேன்  பாருங்கள்....



                                                                   நன்றி !நன்றி!

Monday, November 6, 2017

வாழைக்காய் பொடி !

வாழைக்காய் பொடி செய்முறைக்கு குறிப்பு வீடியோ இதோ:



உங்களின் மேலானக் கருத்துக்கள் ...ப்ளீஸ் .....

Saturday, November 4, 2017

தக்காளி தொக்கு!

தக்காளி தொக்கு செய்முறை வீடியோ  இணைத்திருக்கிறேன்.விரைவாகவும்  செய்து விடலாம். சுவையோ அபாரமாய் இருக்கும். செய்து பார்த்து, உங்களின் மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,,,,,,,


நன்றி! நன்றி !

Tuesday, October 31, 2017

வெந்தய தோசை!

டையாபிடிசைக் கண்ட்ரோல் செய்யும் வெந்தய தோசை செய்முறை விளக்க வீடியோ:


உங்களின்  மேலான கருத்துக்களை  எதிர்பார்க்கிறேன். நன்றி .

Sunday, October 29, 2017

கறிவேப்பிலைப் பொடி

கறிவேப்பிலைப்na பொடி செய்முறை  வீடியோ இணைத்திருக்கிறேன், பொடி சுவையானது மட்டுமல்ல உங்கள் உடல் நலத்thaயும் காக்கும் .



நன்றி! நன்றி! நன்றி!

Thursday, October 26, 2017

கொத்தமல்லி சாதம் !

கொத்தமல்லி சாதம் சுவையானது மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் ஏற்றது.  கொத்தமல்லி சாதத்திலேயே காய்கறிகளும் சேர்த்து செய்தால், எல்லோருக்குமே மதிய உணவாக கொடுத்து விடலாமே. அதுவும் பள்ளிக் குழந்தைகளின்' லஞ்ச்பாக்ஸ் ' ற்கு மிகவும் ஏற்றது. 


எப்படி செய்யலாம் என்று இந்த வீடியோ சொல்கிறது......





                                                   நன்றி! நன்றி! நன்றி !

Sunday, October 22, 2017

ரத்தத்தில் சர்க்கரைக் குறைய .......

இப்பொழுது எங்கெங்கு  நோக்கினும்  சர்க்கரை நோய் தான்.  யாரைக் கேட்டாலும்,  காபியில் சர்க்கரை வேண்டாம்.......... ப்ளீஸ் ....என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.  எல்லாமே நம் பாரம்பர்ய உணவு முறைகளை விட்டு விட்டு வெகு தூரம் வந்ததன் விளைவு.



இப்ப புலம்பி என்ன ஆகப்போகிறது? என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.  வந்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு மருந்து வேண்டுமே என்று தவிக்கிறோம். சர்க்கரையைக்  கட்டுப் படுத்துவதற்கு மிக எளிய மருந்து நம் அஞ்சறைப் பெட்டியில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அது என்ன? எப்படி செய்யலாம் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்......




நன்றி! நன்றி !

Tuesday, October 17, 2017

கோலம் போடலாம் வாங்க!

 கோலம் --தமிழர்களின் கலாச்சாரம். அதிலும் அரிசிமாவினால்  இழைக் கோலம்  போட்டால்  கண் கொள்ளாக் காட்சி தான். எப்படிப் போடுகிறேன் என்று பாருங்களேன்.





உங்களின்  மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ப்ளீஸ்.........

Thursday, September 28, 2017

மட்டர் பனீர் !

மட்டர் பனீர்  செய்முறை வீடியோ
 வட இந்திய.உணவை  சற்றே திசை  திருப்பி தென்னிந்திய  ஸ்டைலில்  செய்திருக்கிறேன். செய்து பார்த்து   உங்களின்  மேலான கருத்துக்களைப்  பகிர்ந்து கொள்ளுங்கள்...



நன்றி!நன்றி ! நன்றி !

Friday, September 15, 2017

சரவண பவன் சாம்பார் !

இணைய தளம் ஒன்றில், இந்த சாம்பார் செய்முறை படித்தேன் .செய்தும்  பார்த்தேன். அற்புதமான ருசியில் இருந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 சுவையான  சாம்பார்(சரவண  பவன்)  செய்வது எளிது . எப்படி செய்வது என்று பார்ப்போம்.






இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபனிற்கு  தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள்.அபார  ருசி. இந்த ருசியில் டிபன் , டேபிளில் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்.
                                               நன்றி ! நன்றி!
                                                      





Thursday, August 31, 2017

இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்!

சில சமயம்,  விருந்தாளிகள் சாப்பிட   வரும்  போது, காலி ஊறுகாய் பாட்டில் நம்மைப்  பார்த்து நக்கலாய் சிரிக்கும்.  உடனே ஊறுகாய் வாங்கி வர உங்களவரும்  முகத்தை சுளிக்கலாம்.  " இருப்பதை வைத்து அட்ஜஸ்ட்  செய்யேன் "  போன்ற அறிவுரைகள்  பறந்து வரலாம்.

ஆனால் மாங்காய் கைவசம்  இருந்தால்  சட்டென்று ஐந்து நிமிடத்தில்,  நாக்கில் நீர் வரவழைக்கும் ஊறுகாய் செய்து விடலாம்.

எப்படி என்று கேட்பவர்கள் கீழிருக்கும் வீடியோவைப் பாருங்களேன்.:





நன்றி !

Friday, August 11, 2017

மைக்ரோ க்ரீன்ஸ் சப்பாத்தி!

மைக்ரோ கிரீன்ஸ்  சப்பாத்தி !

பேரைப் பார்த்து, செய்வதற்கு  சையின்ஸ்  லேப்  வேண்டியிருக்குமோ  என்று சந்தேகப்பட வேண்டாம்.

நம் வீட்டு சமையலறையும், பூத்தொட்டியும் போதும்.


எப்படி செய்ய வேண்டுமென்பது,  இந்த வீடியோ பார்த்தால்  புரிந்து விடும்.

பார்த்து விட்டீர்களா?  அட.....இவ்வளவு  சுலபமா?  என்று நீங்கள் சொல்வது  கேட்கிறது.


Tuesday, August 1, 2017

பீன்ஸ் பருப்புசிலி.

பீன்சில்  கறி ட்டுமே செய்து பழகியிருந்த எனக்கு  அதில் உசிலி என்பது சற்று புதிது. நண்பர் வீட்டில் சாப்பிட்ட போது என்னவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட,  அங்கேயே, அப்பொழுதே செய்யக் கற்றுக் கொண்டேன்.

அட....... இத்தனை வயதாகியும்  இப்ப தான் பருப்புசிலி கற்றுக் கொள்கிறாயா? என்று கேட்காதீர்கள்.  நான் மேலே சொன்ன நிகழ்வு நடந்தது கிட்டத்தட்ட முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பாக.

இப்பொழுது மிக அருமையாக செய்கிறேன் .

சந்தேகமிருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள் .....நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.


Friday, July 21, 2017

பீர்க்கங்காய் துவையல் !

பீர்க்கங்காய் துவையல் செய்யத் தெரியுமா?

தெரியாதவர்கள்  இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தெரிந்தவர்கள் ,உங்கள் ரெசிபியுடன் என் ரெசிபி ஒத்துப் போகிறதா என்று பார்த்துத் திருத்தங்கள் இருந்தால்  சொல்லுங்களேன்.

மகிழ்ச்சியுடன் திருத்திக் கொள்வேன்.

இதோ வீடியோ இணைப்பு :

பீர்க்கங்காய் துவையல் | Ridge Gourd Chutney.

நன்றி! நன்றி!

Thursday, July 6, 2017

பாகற்காய் !

பாகற்காய் என்றாலே கசப்பு நினைவிற்கு வரும்.ஆனால் அதே பாகற்காய்  உடல் நலத்திற்கு எவ்வளவு நன்மை தரும்  என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பாகற்காயை சம்பார வைக்கலாம், கறியாக சமைக்கலாம்.
 வறுவல், ஊறுகாய்  என்றும் செய்து அசத்துகிறார்கள்.

நான் இங்கே சொல்லியிருப்பது பாகற்காய் பிட்ல ....

பாகற்காய் பிட்ல செய்முறையை பார்க்க இங்கே கிளிக்கவும்.

செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்ல மறக்காதீர்கள்.


 

Wednesday, June 14, 2017

இது வித்தியாசமானது !

கத்திரிக்காயில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு  செய்திருக்கிறேன். கத்திரிக்காய் கொஸ்து ,கறி என்றும் செய்திருக்கிறேன்.

 ஆனால், இது சற்றே  வித்தியாசமானது. என் தோழியிடமிருந்துகற்றுக் கொண்ட ரெசிபி. வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானது.

"அப்படியென்ன  புது ரெசிபி இது? " என்கிற உங்கள் கேள்விக்குப் பதில்  இந்த வீடியோவில் உள்ளது.


 Please 'like', ' share' & 'subscribe' too. Do not forget to comment too. Thankyou!


Sunday, June 11, 2017

மாங்காய் தொக்கு!

மாங்காய் சீசனில்  மாங்காய் தொக்குப் போடாமல் இருந்தால் எப்படி?

அதனால் மாங்காய் தொக்குப் போட்டதோடு நிற்காமல்  அதைப் படமும் எடுத்து விட்டேன்.

இந்தப் படத்தைப் பார்ப்பதோடு நிற்காமல்,  அதை உங்கள்.  நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதை  மிகப்பெரிய வெற்றிப் படமாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது.  செய்வீர்கள் என்றும் நம்புகிறேன். நன்றி.

படம் இதோ:

                                         
                                                                  நன்றி!

Monday, June 5, 2017

தேன் நெல்லிக்காய்!

நெல்லிக்காயே தேன் தான்.

அது என்ன தேன் நெல்லிக்காய்  ரெசிபி என்பவர்கள் பார்க்க:



பிடித்திருந்தால் உங்களின் மேலானக் கருத்துக்களை பகிருங்கள். நன்றி!

Sunday, May 28, 2017

வேப்பம்பூ ரசம் !

டயாபிடீஸ்  விஸ்வருபம்  எடுத்திருக்கும், இந்நேரத்தில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை வேம்பு.  நாம் அதை சரியாக  உபயோகித்தால்,  சர்க்கரை நோயை, ஓட, ஓட விரட்டி விடலாம்.

வேம்பின்  எல்லா பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை தான்.

நான் இங்கே, வேப்பம்பூ  சேர்த்து செய்யும் ரசம் பற்றி  இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.


Please 'Like', 'Share', 'Subscribe'& comment to my videos. Thankyou!

Thursday, May 25, 2017

தேங்காய் சிவப்பு மிளகாய் சட்னி !

தினமும் ," இன்னைக்கும்  தோசைக்கு சட்னியா ?" என்று உங்கள் குடும்பத்தினர்  முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா? 

பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, கேட்டு, உங்கள் வீட்டு வாண்டுகளும்,  " எனக்கு சட்னி  வேண்டாம்." என்று முறைக்கிறார்களா?

இதோ இந்த வீடியோவில் இருக்கிறது தீர்வு. சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால், சரி செய்வதெப்படி என்கிற 'டிப்ஸ்' கூட  வீடியோவில் அடங்கியிருக்கிறது.

இதை நீங்கள் மட்டும் பார்க்காமல், நண்பர்களுடன் 'Share' செய்து கொள்ளுங்கள். 'Like'  & Subscribe' பட்டன்களைத் தட்டி விடுங்கள்.

வீடியோவின் கீழே இருக்கும்  'comment' பெட்டியில் உங்கள் கருத்து, சந்தேகம்,  எதை வேண்டுமானாலும்  நான் செய்திருக்கும் தவறுகள் உட்பட..... பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதோ வீடியோ :


          நன்றி ! நன்றி !

Monday, May 22, 2017

சமையல் டிப்ஸ் !

குக்கர் அடுப்பில்  சீறி க் கொண்டிருக்க, உங்கள் கையில்  வெங்காயம்  வெட்டுப்பட, கண்களிலோ  கண்ணீர் ( வெங்காயத்தால்). 

அப்போது உங்களவர் ," என் போனைப் பார்த்தாயா ?" கேட்க,

உங்கள் மகனோ , மகளோ, " அம்மா என் யூனிபார்ம் காணோம்." என்று அபயக் குரல் கொடுக்க .... எல்லாவற்றையும் சரி செய்து விட்டு,

" இதோ புளியைக் கரைத்து சாம்பார்  செய்து விட்டால்  ஆச்சு என்று சமையலறைக்குள் நுழைந்து ,"புளியை  ஊற வைத்த கிண்ணம் எங்கே என்று தேடிய பின் தான் உங்கள் நினைவிற்கு வருகிறது ," இன்னும் புளியை  நனைத்தே  வைக்க வில்லையா?".

"இன்றைக்கு நேரத்திற்கு  எல்லாம் முடித்தாற்  போல் தான்." அங்கலாய்த்துக் கொண்டு , புளியுடன் யுத்தத்தை ஆரம்பிக்கப் போகிறீர்களா?

அப்படிப்பட்ட யுத்தம் தவிர்க்கும் முயற்சி தான்  இந்த வீடியோ :



யுத்தம் தவிர்க்கும் டிப்ஸ்  வீடியோவை, 'Like', 'Share' & 'Subscribe' செய்து விடுங்களேன்.

நன்றி.




Saturday, May 20, 2017

கெட்ட கொழுப்பைக் குறைக்க.....

கொழுப்பே  கெட்டது தான். இதில்  நல்லது,  கெட்டது  என்று  ......என்ன சொல்ல வருகிறாய் ? என்று சிலர்  யோசிப்பது கேட்கிறது..

உடல் நலத்திற்கு, முக்கியமாய் இதயத்திற்குத் தீங்கு செய்யும் ' LDL' கொழுப்பு மருந்தில்லாமல் கரைய  இந்தப் பொடி உதவும். வீட்டிலேயே  எளிதாக செய்யக் கூடிய  பொடி.  . நம் பாரம்பர்ய  உணவு . .சுவைக்கு நான் கியாரண்டி.

எல்லா வயதினரும்,  உண்ணலாம்.

எப்படி செய்யலாம் என்பதை இணைப்பில் இருக்கும் வீடியோவில் விளக்கியிருக்கிறேன். பாருங்களேன்....




 எப்பொழுதும் போல் இந்த வீடியோவிற்கும், 'Like', 'Share' & 'Subscribe'  செய்து விடுங்கள். உங்களுக்கு நன்றியுடையவளாய் இருப்பேன். நன்றி.


Thursday, May 18, 2017

சாம்பார் ரகசியம் !


" அப்படியென்ன தான் சேர்க்கிறாய் உன் சாம்பாரில் ? ருசியாகவும் மனமாகவும் இருக்கிறதே ." என்று பலர் என் சாம்பாரைப் புகழ்வதுண்டு.

ஒரு சின்ன புன்சிரிப்புடன் நகர்ந்து விடுவேன்.

அந்த என் சாம்பார் ரகசியம் இந்த வீடியோவில்  வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது

பாருங்கள்.....  பார்ப்பதோடு நிற்காமல், வீடியோவை  'Like', 'Share' & ' Subscribe'  செய்வது  என் சேனல்  வளர்ச்சிக்கு   பேருதவியாயிருக்கும்.  நன்றி.



!நன்றி! !நன்றி!

Monday, May 15, 2017

மைசூர் ரசம் | Mysore Rasam.

மைசூர்  ரசம் பெயர்க் காரணம்  தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பெயர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.  ரசம்  ருசியாய் இருந்தால் சரி.

இந்த ரசம் மிக ருசியாய் இருக்கும்.  அதற்கு நான் கியாரண்டி.  செய்முறை விளக்கத்தை வீடியோவாக்கி விட்டேன்.

செய்து பாருங்கள்..... 'Share', 'like' & 'subscribe' செய்து விடுங்களேன் ப்ளீஸ் .....

நீங்கள் 'subscribe' செய்வதற்கு இங்கே க்ளிக் செய்து விடுங்கள்....



நன்றி! நன்றி! நன்றி!

Friday, May 12, 2017

உப்புமா கொழுக்கட்டை!

" இன்று மாலை நேர சிற்றுண்டிக்கு  உப்புமா கொழுக்கட்டை  செய்யட்டுமா? " இது நான்.

"உப்புமாவா ? கொழுக்கட்டையா? " என்னவர் மறு கேள்வி கேட்டார்.

"உப்புமா கொழுக்கட்டை நான் செய்ததே இல்லை ? நீங்களும் சாப்பிட்டதேயில்லை . அப்படித்தானே? " யுத்தத்திற்கு ஆயத்தமானேன்.

அவசரமாக அவர்," இல்லை...இல்லை  சாப்பிட்ட  நினைவிருக்கிறது......" என்று வெள்ளைக் கொடி காட்டி என்னை சமாதானப் படுத்தி விட்டார். 

அதற்குப் பிறகு அவரை ஆளையே காணோம். எங்கே என்று  பார்த்தால்  கேமிராவை அட்ஜஸ்ட்  செய்து  கொண்டிருந்தார்.

"கேமிரா எதற்கு?" நான் கேட்க.....

"உப்புமா கொழுக்கட்டை  செய்யப் போகிறாயே  . அதற்குத் தான்...."
முதலில் புரியவில்லை. பின்னர் அவர் நக்கல் புரிந்தது.

" மாட்டிக் கொண்டீர்களா? கேமிராவுடன் வந்து விட்டீர்கள்.உப்புமா கொழுக்கட்டை செய்முறை  வீடியோ எடுத்து விடுங்கள்." நான் சொல்ல....

"அடக் கடவுளே....." அங்கலாய்த்துக் கொண்டே  வீடியோ  எடுத்து விட்டார்.

 இதோ வீடியோ......

பார்த்து உங்களின் 'comments'  மட்டுமல்ல , 'share'&'subscribe' செய்து விடுங்களேன்.
 



நன்றி ! நன்றி!நன்றி!

Wednesday, May 10, 2017

இட்லி மிளகாய் பொடி !

இட்லி தோசையா? எங்களுக்கு சாம்பார், சட்னி தான் வேண்டும் என்று சொல்லும் ரசிகர்கள்  இருக்கிறார்கள்.  வேறு சிலர் சாம்பாரோ, சட்னியோ, அதனுடன் எங்களுக்கு  நல்லெண்ணெயில் குழைத்த  மிளகாய்ப் பொடி அவசியம் வேண்டும்  என்று சொல்லும் மிளகாய்ப் பொடி ரசிகர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

இல்லத்தரசிகளுக்கோ  இட்லி மிளகாய்ப்  பொடி  வiரப் பிரசாதம் என்று சொல்லலாம்.  சட்னி, சாம்பார் செய்ய முடியவில்லையா ?  மிளகாய்ப் பொடி கைவசம் இருந்தால் கவலையே வேண்டாம்.
 ஆனால், மிளகாய்ப் பொடி செய்முறையில் சில நுணுக்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
அதனால், இட்லி மிளகாய்ப் பொடி செய்யும் போது  படம் பிடித்து விட்டேன். படம் எப்படி இருக்கிறது என்று பார்த்து உங்கள் மேலானக் கருத்துகளை சொல்லுங்களேன்.


உங்கள் நண்பர்களிடம் இந்த  You Tube வீடியோவை 'Share' செய்து விடுங்கள்.  வீடியோவிற்குக் கீழே உள்ள 'Like'  மற்றும் 'Subscribe' பட்டன்களை ஓங்கி  ஒரு அடி அடித்து விட்டு,  நகருங்கள்.

Saturday, May 6, 2017

மாங்காய் பொரிச்ச குழம்பு.

மாங்காய் சீசன் என்பதால்மாங்காய் பொரிச்ச குழம்பு,  மதிய  உணவில்.. புளிப்பும் உரைப்புமாக  சுவையான குழம்பு  என்று என் மருமகள்  எனக்குப் புகழாரம்.

மாங்காயில் பச்சடி  செய்வோம், மாங்காய் ஊறுகாய்  தெரியும், ஏன்  மாங்காயில் சாம்பார் கூட கேள்வி பட்டிருக்கிறோம். இதென்ன மாங்காய் பொரிச்ச குழம்பு  என்று கேட்பவர்கள் கீழே இருக்கும் செய் முறை வீடியோவைப் பாருங்கள் .  நீங்களும் செய்து பார்த்து  சுவை எப்படியிருந்தது என்று எனக்கு சொல்ல மறக்காதீர்கள்.  சரியா?




"எங்களுக்குத் தெரியாதையா  நீ செய்திருக்கப் போகிறாய் ?" என்கிற சமையலுலக  ஜாம்பவான்கள் என் செய் முறை  சரி தானா என்று பார்த்து திருத்தங்கள் இருந்தால்  சொல்லுங்களேன்.

ஆனால் வீடியோவை  'like', 'share' & 'subscribe' செய்ய மறக்காதீர்கள் சரியா?

                                                                       நன்றி ! நன்றி!





Wednesday, May 3, 2017

இட்லி சாம்பார்!

இட்லியும், சாம்பாரும் பற்றிய பதிவு என்று நீங்கள் நினைத்து  விடப் போகிறீர்கள்.  இது இட்லிக்கான சாம்பார். இதில் துவரம் பருப்பு சேர்ப்பதில்லை.  துவரம் பருப்பு சேர்க்காமல் சாம்பாரா?  என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

செய்முறையை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.

ஒரு எச்சரிக்கை:  செய்முறைப் பார்த்து சாம்பார்  செய்தீர்களானால்  கணக்கில்லாமல் மலை மலையாய் இட்லி செய்ய வேண்டி நேரலாம். சாம்பாரின் சுவை, இட்லிகளை நிமிட நேரத்தில் காலியாக்கி விடும், அபாயம் உண்டு. அதற்காகத் தான் இந்த எச்சரிக்கை.

இதோ வீடியோ:

வீடியோ பார்த்த பின்பு 'Like', 'Share' & 'Subscribe'  செய்ய மறக்க வேண்டாமே! ப்ளீஸ்.......



                                                         நன்றி ! நன்றி!நன்றி!

Friday, April 28, 2017

கொத்தமல்லி துவையல்/ சட்னி

அன்று தோழி கமலி என் வீட்டிற்கு விஜயம்.

" அட.... கமலியா ....வா வா...."  நான் வரவேற்றேன்.

அவளுக்கு ஜில்லென்று  எலுமிச்சை ஜூஸ் கொடுத்து விட்டு பேச உட்கார்ந்ததில் நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.

இவளுக்கு சாப்பிட ஒன்றும் கொடுக்கவில்லையே என்று நினைவு வர.........அவளுக்குத் தோசை வார்த்துக் கொடுத்தேன். அதற்கு ஜோடியாக  கொத்தமல்லி சட்னி  வைத்து சாப்பிட சொன்னேன்.

" அட.... ராஜி.... இந்த கொத்தமல்லை சட்னி  படு ஜோர்.  வித்தியாசமாய் இருக்கிறதே. அபார ருசி "  நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் .

நானோ பெருமையாய் ,"வெங்காயம் சேர்த்து  அரைத்தேன் கமலி." என்றேன்.

"வெங்காயமா... கொத்தமல்லியுடனா ?  அப்புறம்......? " இழுத்தாள் கமலி.

"அப்புறம்........ விழுப்புரம் " நான் நக்கலடித்து விட்டு ,

" இந்த வீடியோவைப் பார்த்துக் கொள்."  என்று  என் ஃபோனை அவளிடம் நகர்த்தினேன்..

நீங்களும் தான் பாருங்களேன். சட்டென்று செய்து விடலாம். ருசியோ அபாரம்.



      'Share', 'Like' & 'Subscribe' செய்ய  மறக்க வேண்டாமே  ப்ளீஸ் ....
                                                    நன்றி! நன்றி!

Monday, April 24, 2017

வாழைப்பூ வடை!

அன்று மார்கெட்டிற்கு சென்றிருந்த போது ,வாழைப்பூ  கண்ணில் பட சட்டென்று ஒன்று வாங்கி வந்து விட்டேன். அதை ஆய்ந்து கள்ளன் எடுத்து, நறுக்கி.....சலித்துப் போய்விட்டது.

குடும்பத்தாரின் உடல் நலத்தை முன்னிட்டு, வாழைப்பூவை சரி செய்து, மறு நாள்  உசிலியாக செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தேன் . ஆனால் வீட்டில் எல்லோரும் வாழைப்பூ வடை செய்தால் தான் ஆயிற்று என்று சொல்லவே , உசிலி என்று முடிவு செய்திருந்ததை மாற்றி வடையாக செய்து விட்டேன்.

வாழைப்பூ  வடை செய்முறை  வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு:
        
                           

உங்களின் மேலானக் கருத்துகளை வீடியோவிற்குக் கீழே  இருக்கும் கருத்துப் பெட்டிக்குள்  இட்டால் கூடுதல் மகிழ்ச்சி.
                                                          நன்றி!நன்றி!

Thursday, April 20, 2017

தேங்காய் சட்னி !



நான்  'Rajisivams kitchen' You Tube Channel  ஆரம்பித்ததிலிருந்து , சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ,  சமையலறையில் கேமிரா  சரியாக செட் ஆகியிருக்கிறதா என்பதில் அதிக அக்கறை எனக்கு என்று வீட்டில் எல்லோரும் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வதை உண்மையாக்கி விட்டேன். தேங்காய் சட்னியையும் விடவில்லை . படமெடுத்தாச்சு. பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லி விடுங்கள்.  வீடியோப் பார்த்த பின் மறக்காமல்  ஷேர் செய்து விடுங்கள்.

அப்படி ஷேர் செய்ய மறந்து விட்டால் நாளை நீங்கள் சாப்பிடும் சட்னியில் உப்பு அதிகமாகி விடும், சாத்தியக் கூறுகள் அதிகமாகும் அபாயம் உள்ளது.t

ஷேர்  செய்து வரும் நண்பரகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

இதோ தேங்காய் சட்னி வீடியோ :



'Like', 'Share' & 'Subscribe'  செய்யும் நண்பர்களுக்கு  மீண்டும் எனது  நன்றிகள் பல.

Monday, April 17, 2017

பருப்புத் துவையலுக்கு எது இணை?

உலகம் சுற்றும் வாலிபனான  என் மகன் எப்பொழுது தரையிறங்கினாலும், அவன்  விருபப்பட்டுக் கேட்பது பருப்புத் துவையலும், வத்தக் குழம்பும் தான்.     
'' உலகில்  பல இடங்களில் சாப்பிட்டிருக்கிறேன்.என்ன தான் வெண்ணெயும், க்ரீமுமே கொட்டி கொட்டி செய்தாலும்,  அவையெல்லாம் நம்   பருப்புதுவையலிற்கும், வத்தக் குழம்பிற்கும் ஈடாகுமா ?" என்று அங்கலாய்ப்பான்.

உங்களுக்கும் 'பருப்புத்துவையல்,வத்தக்குழம்பு 'ஜோடியைப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.

நான் செய்யும் வத்தக்குழம்பு செய்முறை பார்க்க  இங்கே ' க்ளிக்' செய்யவும் .

பருப்புத் துவையல் எப்படி செய்வது என்று கீழிருக்கும்  வீடியோவில் சொல்கிறேன்.



           உங்களின் மேலான கருத்துக்கள் என்னை மேம்படுத்த உதவும்.
                                                           நன்றி! நன்றி!


Friday, April 14, 2017

மாங்காய் பச்சடி

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு அன்று எத்தனை  இனிப்பு வகை செய்தாலும், மாங்காய் பச்சடி இல்லாமல் புத்தாண்டா?  நான் மட்டும் செய்யாமல் விடுவேனா என்ன? செய்தேன் மிக அருமையாக வந்திருந்தது. 

அருமையாய் அமைந்ததை வீடியோ எடுத்துப் பதிவிட்டுக் கொண்டால் என்றாவது உபயோகமாக இருக்குமே என்று படம் பிடித்துக் கொண்டேன்.

பச்சடி சுவைத்த பின் என்னவர்  கேட்டார்," எல்லாம் சரி. முக்கியமான ஒன்றை  அதில் சேர்க்க மறந்து விட்டாயே " என்று.

அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.  ஆமாம்.......ஸ்........மறந்து விட்டேன். ஆனால் அது போடாமல் இருந்ததாலும்  சுவையில் எந்த மாற்றமும்  இல்லை. என்னவென்று  யோசிக்கிறீர்களா?

பாருங்கள் உங்களுக்கேப் புரியும் :-


    உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்ய மறக்க வேண்டாமே! நன்றி ! நன்றி!

Tuesday, April 11, 2017

வத்தக் குழம்பு

'வத்தக் குழம்பு' என்பதை விடவும் 'வற்றல் குழம்பு' என்பதே சரி என்றே நினைக்கிறேன் . வத்தக் குழம்பு  என்று சொன்னால் எளிதாக எல்லோருக்கும் விளங்கும் என்பதால்  அதையே தலைப்பாக்கி விட்டேன்.

வத்தக் குழம்பு செய்யத் தேவையானவை :


புளி  ஒரு சின்ன உருண்டை. ( கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் பொடி  - கால் ஸ்பூன்.
சாம்பார் பொடி - 2-3 ஸ்பூன்.
முருங்கைக்காய்  நறுக்கியது .
உப்பு  - தேவைக்கேற்ப


இன்னும் என்னென்ன தேவை, எப்படி செய்வது என்று நான் சொல்வதை விடவும் ,செய்முறையை வீடியோவில் பார்த்தால் சட்டென்று புரிந்து விடும் என்பதால்

இதோ  வீடியோ:



வீடியோவை  உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் 'ஷேர்'  செய்ய மறக்க வேண்டாம். ' ஷேரிங் '  பற்றி (ஓய்வு பெற்ற ) ஆசிரியையான நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்களாம்.

                                                              நன்றி !

Saturday, April 8, 2017

பூண்டு பொடி

உங்கள் இதயத்திற்கு  இதமான பொடி வகை ஒன்றை இங்கே பகிர்கிறேன்.
நான் இங்கே சொல்லப் போவது பூண்டுப் பொடி.


எப்படி செய்ய வேண்டுமென்பதை  நான் சொல்வதை விட வீடியோவைப் பார்த்தால் நன்கு விளங்கும்.

 

  

நீங்களும் செய்து பாருங்கள்..
சாதத்தோடு பூண்டுப் பொடி பரிமாறிப்  பாருங்கள்  அலாதியான ருசியுடன் , உங்கள் அன்புக்குரியவர்களின்  இதயத்தையும்  ஆரோக்கியமாகப் பாதுகாத்துக் கொடுக்கும். நீங்களும் சாப்பிட மறக்க வேண்டாம். உங்கள் இதயமும் பலப்படட்டும் .


Monday, March 20, 2017

இட்லி ஃபிரை!

இட்லி ஃபிரை செய்முறை  வீடியோ இணைப்பு இதோ: செய்து பார்த்து  உங்கள் மேலான கருத்துக்களை  எதிர் பார்க்கிறேன்.




  செய்து பார்த்து  உங்கள் மேலான கருத்துக்களை  சொல்லுங்கள்!.

                                                         நன்றி! நன்றி! நன்றி!