காஞ்சிபுரம் இட்லி செய்யத் தெரியுமா ?
இதோ ரெசிபி
தேவையானவை :
ஊற வைத்து அரைக்க
இதோ ரெசிபி
தேவையானவை :
ஊற வைத்து அரைக்க
- இட்லி அரிசி (பு. அரிசி) --- 1 கப்
- பச்சை அரிசி ------ 1/2 கப்
- உளுத்தம் பருப்பு -----1 கப்
- வெந்தயம் -----1/2 ஸ்பூன்
- மிளகு ----1 ஸ்பூன்.
- சீரகம் ----1 ஸ்பூன்
- கடுகு -----1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு ----1 ஸ்பூன்
- கடலை பருப்பு---------1 ஸ்பூன் \
- முந்திரி சிறிது.
- நல்லெண்ணெய் 1 ஸ்பூன்
- நெய் சிறிது.
- கருவேப்பிலை சிறிது.
- கொத்தமல்லி-- சிறிது.
- இஞ்சி சிறு துண்டு( நறுக்கியது)
- ஆப்ப சோடா ஒரு சிட்டிகை.(விருப்பப்பட்டால்)
- மிளகு பொடி சிறிது
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
4 அல்லது 5 மணி நேரம் அரிசி(இரண்டு அரசியையும்), உ .பருப்பையும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறின அரிசியை சற்றே கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் கொரகொரப்பாகவும் இருக்க வேண்டம், ரொம்பவும் நைசாகவும் அரைக்க வேண்டாம். அரிசி உப்புமாவிற்கு அரிசி உடைபடும் அளவில் இருந்தால் போதும்.உளுத்தம்பருப்பை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.( சிலர் அரிசி பருப்பு எல்லாம் ஒன்றாகப் போட்டும் அரைப்பார்கள். நான் தனியாகத் தான் அரைத்து செய்தேன். ஆப்பசோடா ஒரு சிட்டிகை போடுவதால் தவறில்லை) அரிசி மாவு, உளுத்தமாவு இரண்டையும் உப்புப் போட்டு நன்கு கலந்து வைக்கவும். எட்டு மணி நேரம் ஆன பின்பு, கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடான பின்பு ,கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், போட்டு சிவக்க வறுக்கவும். பின்பு அதிலேயே கறிவேப்பிலை, இஞ்சிப் போட்டு தாளித்து, மாவில் கொட்டவும். முந்திரியையும் நெய்யில் வறுத்து மாவில் போடவும். மறக்காமல் மிளகுத் தூளை சேர்க்கவும். சுக்கும் தூள் செய்து சேர்த்துக் கொள்ளலாம். நான் இஞ்சி மட்டுமே சேர்த்தேன்.
பிறகு,இட்லி தட்டிலோ, அல்லது சின்ன சின்ன கப்பிலோ ஊற்றி வேக வைக்கவும்.