Showing posts with label வெந்தயம். Show all posts
Showing posts with label வெந்தயம். Show all posts

Sunday, October 22, 2017

ரத்தத்தில் சர்க்கரைக் குறைய .......

இப்பொழுது எங்கெங்கு  நோக்கினும்  சர்க்கரை நோய் தான்.  யாரைக் கேட்டாலும்,  காபியில் சர்க்கரை வேண்டாம்.......... ப்ளீஸ் ....என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.  எல்லாமே நம் பாரம்பர்ய உணவு முறைகளை விட்டு விட்டு வெகு தூரம் வந்ததன் விளைவு.



இப்ப புலம்பி என்ன ஆகப்போகிறது? என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.  வந்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு மருந்து வேண்டுமே என்று தவிக்கிறோம். சர்க்கரையைக்  கட்டுப் படுத்துவதற்கு மிக எளிய மருந்து நம் அஞ்சறைப் பெட்டியில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அது என்ன? எப்படி செய்யலாம் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்......




நன்றி! நன்றி !

Sunday, May 28, 2017

வேப்பம்பூ ரசம் !

டயாபிடீஸ்  விஸ்வருபம்  எடுத்திருக்கும், இந்நேரத்தில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை வேம்பு.  நாம் அதை சரியாக  உபயோகித்தால்,  சர்க்கரை நோயை, ஓட, ஓட விரட்டி விடலாம்.

வேம்பின்  எல்லா பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை தான்.

நான் இங்கே, வேப்பம்பூ  சேர்த்து செய்யும் ரசம் பற்றி  இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.


Please 'Like', 'Share', 'Subscribe'& comment to my videos. Thankyou!

Tuesday, April 11, 2017

வத்தக் குழம்பு

'வத்தக் குழம்பு' என்பதை விடவும் 'வற்றல் குழம்பு' என்பதே சரி என்றே நினைக்கிறேன் . வத்தக் குழம்பு  என்று சொன்னால் எளிதாக எல்லோருக்கும் விளங்கும் என்பதால்  அதையே தலைப்பாக்கி விட்டேன்.

வத்தக் குழம்பு செய்யத் தேவையானவை :


புளி  ஒரு சின்ன உருண்டை. ( கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் பொடி  - கால் ஸ்பூன்.
சாம்பார் பொடி - 2-3 ஸ்பூன்.
முருங்கைக்காய்  நறுக்கியது .
உப்பு  - தேவைக்கேற்ப


இன்னும் என்னென்ன தேவை, எப்படி செய்வது என்று நான் சொல்வதை விடவும் ,செய்முறையை வீடியோவில் பார்த்தால் சட்டென்று புரிந்து விடும் என்பதால்

இதோ  வீடியோ:



வீடியோவை  உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் 'ஷேர்'  செய்ய மறக்க வேண்டாம். ' ஷேரிங் '  பற்றி (ஓய்வு பெற்ற ) ஆசிரியையான நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்களாம்.

                                                              நன்றி !