Showing posts with label Rajisivams. Show all posts
Showing posts with label Rajisivams. Show all posts

Tuesday, August 1, 2017

பீன்ஸ் பருப்புசிலி.

பீன்சில்  கறி ட்டுமே செய்து பழகியிருந்த எனக்கு  அதில் உசிலி என்பது சற்று புதிது. நண்பர் வீட்டில் சாப்பிட்ட போது என்னவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட,  அங்கேயே, அப்பொழுதே செய்யக் கற்றுக் கொண்டேன்.

அட....... இத்தனை வயதாகியும்  இப்ப தான் பருப்புசிலி கற்றுக் கொள்கிறாயா? என்று கேட்காதீர்கள்.  நான் மேலே சொன்ன நிகழ்வு நடந்தது கிட்டத்தட்ட முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பாக.

இப்பொழுது மிக அருமையாக செய்கிறேன் .

சந்தேகமிருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள் .....நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.


Sunday, May 28, 2017

வேப்பம்பூ ரசம் !

டயாபிடீஸ்  விஸ்வருபம்  எடுத்திருக்கும், இந்நேரத்தில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை வேம்பு.  நாம் அதை சரியாக  உபயோகித்தால்,  சர்க்கரை நோயை, ஓட, ஓட விரட்டி விடலாம்.

வேம்பின்  எல்லா பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை தான்.

நான் இங்கே, வேப்பம்பூ  சேர்த்து செய்யும் ரசம் பற்றி  இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.


Please 'Like', 'Share', 'Subscribe'& comment to my videos. Thankyou!

Thursday, May 25, 2017

தேங்காய் சிவப்பு மிளகாய் சட்னி !

தினமும் ," இன்னைக்கும்  தோசைக்கு சட்னியா ?" என்று உங்கள் குடும்பத்தினர்  முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா? 

பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, கேட்டு, உங்கள் வீட்டு வாண்டுகளும்,  " எனக்கு சட்னி  வேண்டாம்." என்று முறைக்கிறார்களா?

இதோ இந்த வீடியோவில் இருக்கிறது தீர்வு. சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால், சரி செய்வதெப்படி என்கிற 'டிப்ஸ்' கூட  வீடியோவில் அடங்கியிருக்கிறது.

இதை நீங்கள் மட்டும் பார்க்காமல், நண்பர்களுடன் 'Share' செய்து கொள்ளுங்கள். 'Like'  & Subscribe' பட்டன்களைத் தட்டி விடுங்கள்.

வீடியோவின் கீழே இருக்கும்  'comment' பெட்டியில் உங்கள் கருத்து, சந்தேகம்,  எதை வேண்டுமானாலும்  நான் செய்திருக்கும் தவறுகள் உட்பட..... பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதோ வீடியோ :


          நன்றி ! நன்றி !

Monday, May 22, 2017

சமையல் டிப்ஸ் !

குக்கர் அடுப்பில்  சீறி க் கொண்டிருக்க, உங்கள் கையில்  வெங்காயம்  வெட்டுப்பட, கண்களிலோ  கண்ணீர் ( வெங்காயத்தால்). 

அப்போது உங்களவர் ," என் போனைப் பார்த்தாயா ?" கேட்க,

உங்கள் மகனோ , மகளோ, " அம்மா என் யூனிபார்ம் காணோம்." என்று அபயக் குரல் கொடுக்க .... எல்லாவற்றையும் சரி செய்து விட்டு,

" இதோ புளியைக் கரைத்து சாம்பார்  செய்து விட்டால்  ஆச்சு என்று சமையலறைக்குள் நுழைந்து ,"புளியை  ஊற வைத்த கிண்ணம் எங்கே என்று தேடிய பின் தான் உங்கள் நினைவிற்கு வருகிறது ," இன்னும் புளியை  நனைத்தே  வைக்க வில்லையா?".

"இன்றைக்கு நேரத்திற்கு  எல்லாம் முடித்தாற்  போல் தான்." அங்கலாய்த்துக் கொண்டு , புளியுடன் யுத்தத்தை ஆரம்பிக்கப் போகிறீர்களா?

அப்படிப்பட்ட யுத்தம் தவிர்க்கும் முயற்சி தான்  இந்த வீடியோ :



யுத்தம் தவிர்க்கும் டிப்ஸ்  வீடியோவை, 'Like', 'Share' & 'Subscribe' செய்து விடுங்களேன்.

நன்றி.




Monday, May 15, 2017

மைசூர் ரசம் | Mysore Rasam.

மைசூர்  ரசம் பெயர்க் காரணம்  தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பெயர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.  ரசம்  ருசியாய் இருந்தால் சரி.

இந்த ரசம் மிக ருசியாய் இருக்கும்.  அதற்கு நான் கியாரண்டி.  செய்முறை விளக்கத்தை வீடியோவாக்கி விட்டேன்.

செய்து பாருங்கள்..... 'Share', 'like' & 'subscribe' செய்து விடுங்களேன் ப்ளீஸ் .....

நீங்கள் 'subscribe' செய்வதற்கு இங்கே க்ளிக் செய்து விடுங்கள்....



நன்றி! நன்றி! நன்றி!

Saturday, May 6, 2017

மாங்காய் பொரிச்ச குழம்பு.

மாங்காய் சீசன் என்பதால்மாங்காய் பொரிச்ச குழம்பு,  மதிய  உணவில்.. புளிப்பும் உரைப்புமாக  சுவையான குழம்பு  என்று என் மருமகள்  எனக்குப் புகழாரம்.

மாங்காயில் பச்சடி  செய்வோம், மாங்காய் ஊறுகாய்  தெரியும், ஏன்  மாங்காயில் சாம்பார் கூட கேள்வி பட்டிருக்கிறோம். இதென்ன மாங்காய் பொரிச்ச குழம்பு  என்று கேட்பவர்கள் கீழே இருக்கும் செய் முறை வீடியோவைப் பாருங்கள் .  நீங்களும் செய்து பார்த்து  சுவை எப்படியிருந்தது என்று எனக்கு சொல்ல மறக்காதீர்கள்.  சரியா?




"எங்களுக்குத் தெரியாதையா  நீ செய்திருக்கப் போகிறாய் ?" என்கிற சமையலுலக  ஜாம்பவான்கள் என் செய் முறை  சரி தானா என்று பார்த்து திருத்தங்கள் இருந்தால்  சொல்லுங்களேன்.

ஆனால் வீடியோவை  'like', 'share' & 'subscribe' செய்ய மறக்காதீர்கள் சரியா?

                                                                       நன்றி ! நன்றி!