Showing posts with label மாங்காய். Show all posts
Showing posts with label மாங்காய். Show all posts

Thursday, August 31, 2017

இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்!

சில சமயம்,  விருந்தாளிகள் சாப்பிட   வரும்  போது, காலி ஊறுகாய் பாட்டில் நம்மைப்  பார்த்து நக்கலாய் சிரிக்கும்.  உடனே ஊறுகாய் வாங்கி வர உங்களவரும்  முகத்தை சுளிக்கலாம்.  " இருப்பதை வைத்து அட்ஜஸ்ட்  செய்யேன் "  போன்ற அறிவுரைகள்  பறந்து வரலாம்.

ஆனால் மாங்காய் கைவசம்  இருந்தால்  சட்டென்று ஐந்து நிமிடத்தில்,  நாக்கில் நீர் வரவழைக்கும் ஊறுகாய் செய்து விடலாம்.

எப்படி என்று கேட்பவர்கள் கீழிருக்கும் வீடியோவைப் பாருங்களேன்.:





நன்றி !

Sunday, June 11, 2017

மாங்காய் தொக்கு!

மாங்காய் சீசனில்  மாங்காய் தொக்குப் போடாமல் இருந்தால் எப்படி?

அதனால் மாங்காய் தொக்குப் போட்டதோடு நிற்காமல்  அதைப் படமும் எடுத்து விட்டேன்.

இந்தப் படத்தைப் பார்ப்பதோடு நிற்காமல்,  அதை உங்கள்.  நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதை  மிகப்பெரிய வெற்றிப் படமாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது.  செய்வீர்கள் என்றும் நம்புகிறேன். நன்றி.

படம் இதோ:

                                         
                                                                  நன்றி!

Friday, April 14, 2017

மாங்காய் பச்சடி

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு அன்று எத்தனை  இனிப்பு வகை செய்தாலும், மாங்காய் பச்சடி இல்லாமல் புத்தாண்டா?  நான் மட்டும் செய்யாமல் விடுவேனா என்ன? செய்தேன் மிக அருமையாக வந்திருந்தது. 

அருமையாய் அமைந்ததை வீடியோ எடுத்துப் பதிவிட்டுக் கொண்டால் என்றாவது உபயோகமாக இருக்குமே என்று படம் பிடித்துக் கொண்டேன்.

பச்சடி சுவைத்த பின் என்னவர்  கேட்டார்," எல்லாம் சரி. முக்கியமான ஒன்றை  அதில் சேர்க்க மறந்து விட்டாயே " என்று.

அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.  ஆமாம்.......ஸ்........மறந்து விட்டேன். ஆனால் அது போடாமல் இருந்ததாலும்  சுவையில் எந்த மாற்றமும்  இல்லை. என்னவென்று  யோசிக்கிறீர்களா?

பாருங்கள் உங்களுக்கேப் புரியும் :-


    உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்ய மறக்க வேண்டாமே! நன்றி ! நன்றி!

Sunday, July 13, 2014

வெந்தய மாங்காய் ஊறுகாய்

சட்டென்று மாங்காய் ஊறுகாய் சாப்பிடத் தோன்றுகிறதா?
இதோ வெந்தய மாங்காய் ஊறுகாய். செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.


செய்யத் தேவையானவை :





  1. மாங்காய்
  2. சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப 
  3. வெந்தயம் ஒரு டீஸ்பூன்
  4. பெருங்காயம் சிறிது.
  5. உப்பு  தேவைக்கேற்ப
  6. கடுகு ஒரு டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் இரண்டு குழிக்கரண்டி.

செய்முறை








மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்புன் எண்ணெய் விடவும். பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்தபின் வெந்தயம் போடவும். வெந்தயம் சட்டென்று சிவந்து விடும் . சிவந்த உடனே  வறுத்த பெருங்காயத்தையும், வறுத்த வெந்தயத்தையும் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.பின்பு மிளகாயைப் போட்டு அதையும்  வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.வறுத்த எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பையும் சேர்த்து நன்கு நைசாக  அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எடுத்து வைத்திருக்கும் இருக்கும் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும், பின் நறுக்கிய மாங்காயைப் போட்டு  அரைத்த பொடியைப் போட்டு சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி விடவும். பின்பு இறக்கி ஆறிய பின் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
(அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம்.மாங்காய் வேக வேண்டிய அவசியமில்லை )

உடனேயும்  மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளாம். ஆனால் மறு நாள் ஊறுகாயை சுவைத்தால் நன்கு ஊறி சுவையாகக் காணப்படும்.

குறிப்பு:  வெந்தயம் வறுக்கும் போது  கவனம் தேவை வெந்தயம் தீய்ந்து  விட்டால் ஊறுகாய் கசந்து விடும்.






அதிக நாட்கள்  வைத்திருக்க வேண்டுமானால் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.