Showing posts with label ஸ்டஃப்.. Show all posts
Showing posts with label ஸ்டஃப்.. Show all posts

Wednesday, June 14, 2017

இது வித்தியாசமானது !

கத்திரிக்காயில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு  செய்திருக்கிறேன். கத்திரிக்காய் கொஸ்து ,கறி என்றும் செய்திருக்கிறேன்.

 ஆனால், இது சற்றே  வித்தியாசமானது. என் தோழியிடமிருந்துகற்றுக் கொண்ட ரெசிபி. வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானது.

"அப்படியென்ன  புது ரெசிபி இது? " என்கிற உங்கள் கேள்விக்குப் பதில்  இந்த வீடியோவில் உள்ளது.


 Please 'like', ' share' & 'subscribe' too. Do not forget to comment too. Thankyou!


Wednesday, December 18, 2013

கொத்தமல்லி தொக்கு









கொத்தமல்லி  , சீசனில் சீப்பாக கிடைக்கும்போது  தொக்கு செய்து வைத்துக் கொண்டால் , பல நாட்கள் வரை கெடாமல்  இருக்கும்.

தொக்கு செய்யத்  தேவையான  பொருட்கள்:

கொத்தமல்லி  ஒரு சின்ன கட்டு.
உளுத்தம்பருப்பு  ஒரு கைப்பிடியளவு.
சிவப்பு மிளகாய்  உங்கள் ருசிக்கேற்ப
புளி  ஒரு சின்ன  ஆரஞ்சு  சைஸ்  அளவு .
உப்புத்  தேவையான அளவு.
பெருங்காயம்  சிறிது.
எண்ணெய் ஒரு டீ ஸ்பூன் .

கொத்தமல்லியை  தண்ணீரில் நன்கு  கிளீன் செய்து, நறுக்கி வைத்துக் கொள்ளவும் .


வாணலியில்  எண்ணெய்  சூடான பின்  ,  பெருங்காயம்  வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் உளுத்தம் பருப்பை  சிவக்க  வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகாயையும் வறுக்கவும்

உப்பு, பெருங்காயம்,  வறுத்த உளுத்தம்பருப்பு  , மிளகாய் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு  நன்கு  பொடியாக்கவும்.

ரொம்பவும் நைசாக  அரைக்க வேண்டாம். லேசாக  "நறநற"  என்று  இருக்கும் போது ,புளியை, மிக்சியில் போட்டு சுற்றவும். நன்கு கலந்து வந்ததும் , நறுக்கி வைத்த கொத்தமல்லியையும் ,போட்டு இரண்டு மூன்று  சுற்று சுற்றவும்.
நாம் உளுத்தம்பருப்பு  வறுத்து சேர்ப்பது   ரொம்பவும் "பிசுக்  'என்று ஒட்டாமல் இருப்பதற்காகத் தான்.



எடுத்து கண்ணாடி  பாட்டிலிலோ  அல்லது  எவர் சில்வர் டப்பாவிலோ   வைத்துக் கொள்ளுங்கள். மாசக் கணக்கிலிருக்கும். விருப்பப்பட்டால்
ஃ பிரிட்ஜிலும்  வைத்து உபயோகிக்கலாம்.

தயவு செய்து பிளாஸ்டிக் பாட்டிலிலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ  வைக்க  வேண்டாமே!
ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை !

செய்து பார்த்து சொல்லுங்களேன்.

Sunday, November 17, 2013

மஞ்சள் மகிமை









சர்வதேச  உணவுகள் பற்றிய கருத்தரங்கு  ஒன்றில்  இந்திய உணவுகளைப் பற்றிய விவாதத்தில்  மஞ்சள்  முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
மஞ்சளின் மகத்துவம் பற்றி மேலை நாட்டவரும் அறிந்திருக்கிரார்கள்.
 நம் முன்னோர்கள் மஞ்சளின்  மகத்துவம் உணர்ந்து  அடுத்தடுத்த  தலை முறைக்கு  சொல்லிக் கொடுத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் தான் சிலவற்றை பத்தாம்பசலித்தனம்  என்று ஒதுக்கித் தள்ளியிருக்கிறோம்.நல்ல வேளையாக நாம் சாம்பாருக்கும், ரசத்திற்கும் இன்னும் மஞ்சள் போட்டுக் கொண்டு தானிருக்கிறோம்.

இந்த மகிமை வாய்ந்த மஞ்சளும் , பாலும் கலந்தால்  என்னென்ன நமைகள் கிடைக்கும் பார்க்கலாம்.முதலில் மஞ்சள் பால் எப்படி தயாரிப்பது என்று முதலில் பார்ப்போமா?

விரலிமஞ்சள் அல்லது கொம்பு மஞ்சள்  ஒன்று அல்லது இரண்டு .  சுத்தியலினால்   நன்றாக உடைத்துக் கொள்ளுங்கள்.(நைசாக மிகிஸ்யில் போட்டு அரைக்க வேண்டாம்)

" கேசில் "  ஒரு பெரிய டம்ளர் அளவு பாலை வைத்து அதில் இந்த உடைத்த மஞ்சளைப் போட்டு  பொங்கப்பொங்கக்  காய்ச்சவும். பின் டீ ஃபில்டரில்  வடிகட்டி  சர்க்கரைப் போட்டோ ., போடாமலோ  ஆற்றிக் குடிக்கலாம். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இந்தப் பாலைக் குடித்தால்  அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
என்னென்ன நன்மைகள்? கொஞ்சம் சொல்லி விட்டுப் போயேன் என்று கேட்பவர்களுக்காக .......

1. மஞ்சள் பால்  உடலை  உஷ்ணப்படுத்தும் குணமிருப்பதால் , நெஞ்சில் சளி,கபம்., சைனஸ்  தொல்லை , ஆஸ்துமா  ஆகியவற்றுக்கு  விரைவான நிவாரணம் கிடைக்கும்.

2. மஞ்சள் பால் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டிருப்பதால்.மார்பகம், சருமம் , நுரையீரல்,புரோஸ்டேட் ,மற்றும் பெருங்குடல்  புற்று நோய் வராமல் தடுக்கிறது.

3. தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? மஞ்சள் பால் குடித்து  விட்டுப் படுங்கள். பிறகென்ன ஆனந்தமாக தூங்கலாம்.

4.மஞ்சள் பால் மூட்டு வலிக்கும் மிகப்பெரிய மருந்தாகிறது.வலியைக் குறைத்து நெகிழ்தண்மையுள்ள  தசைகள் உருவாக உதவுகிறது.

5.ரத்தத்தையும் சுத்தப்படுத்துமாம் இது.

6. நல்ல ஆரோக்கியமான  எலும்பைக் கொடுப்பதோடு  ,  எலும்புத் தேய்மானமும்  வராமல் தடுக்கும்.

7.செரிமானத்திற்கு  உதவுவதோடு , அஜீரணம், வயிற்றுப் புண்,வயிற்றுப் போக்கு எல்லாவற்றிற்கும் சரியான மருந்து  மஞ்சள் பால்.

8. மஞ்சள் பாலை  ரெகுலராக  குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும்  வயிற்று வலி.  பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் விரைவில் நலம் பெறவும், கருப்பை  சுருங்கதலும்   விரைந்து நடக்க உதவும்..

9. சருமத்தில் சொறி, சிரங்கு  போன்றவற்றிற்கு,  மஞ்சள் பாலில் தோய்த்த பஞ்சை வைத்து  ஒத்தி  எடுத்து வந்தால்  சில நாட்களில்  .ஆறிவிடும்.

10. மிக முக்கியமான  செய்தி. மஞ்சள் பாலைத் தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்பின் அளவு குறைந்து  எடைக் குறைப்பிற்கு பேருதவியாக இருக்கிறது.

இப்படி அருமையான சக்தியை உள்ளடக்கிய பொன்னான மஞ்சள் பாலை  அருந்தி ஆரோக்கியம் பெறுவோமா?

images courtesy---google.