Showing posts with label வெங்காயம். Show all posts
Showing posts with label வெங்காயம். Show all posts

Tuesday, February 27, 2018

தாளிப்பு வெங்காய வடகம்!

கோடை வந்து விட்டதே ? வடகம் போட்டு விட்டீர்களா?
வெங்காய வடகம் வீடியோ இதோ....

சாம்பார் வெங்காயம் வைத்து செய்வது இந்த தாளிப்பு வடகம். இதனுடன், சீரகம், வெந்தயம், கடுகு.  etc.......போன்ற விஷயங்களும்  தேவை.


வீடியோ இதோ.......

       
                                                             நன்றி ! நன்றி!

Monday, November 20, 2017

கார சாரமான பச்சை மிளகாய் சட்னி

இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் போரடித்து விட்டதா?
குடும்பத்தினர் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா?  இந்த கார சார சட்னி செய்து பாருங்கள்.... உன்னைப் போல் உண்டா என்கிற புகழ்ச்சிக்கடலில் உங்களைத்  தள்ளி திக்கு முக்காட செய்து விடுவார்கள் பாருங்களேன்.....


                                                      நன்றி ! நன்றி

Friday, November 17, 2017

கார சாரமான வெங்காய சட்னி!

இட்லி, தோசைக்கு பக்கத் துணையாக  காரசாரமான வெங்காய சட்னி.......நினைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறதே........

அந்த வெங்காய சட்னி செய்முறை தான் இந்த வீடியோவில் இருக்கிறது.....



Thankyou! Thankyou!

Saturday, November 4, 2017

தக்காளி தொக்கு!

தக்காளி தொக்கு செய்முறை வீடியோ  இணைத்திருக்கிறேன்.விரைவாகவும்  செய்து விடலாம். சுவையோ அபாரமாய் இருக்கும். செய்து பார்த்து, உங்களின் மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,,,,,,,


நன்றி! நன்றி !

Thursday, October 26, 2017

கொத்தமல்லி சாதம் !

கொத்தமல்லி சாதம் சுவையானது மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் ஏற்றது.  கொத்தமல்லி சாதத்திலேயே காய்கறிகளும் சேர்த்து செய்தால், எல்லோருக்குமே மதிய உணவாக கொடுத்து விடலாமே. அதுவும் பள்ளிக் குழந்தைகளின்' லஞ்ச்பாக்ஸ் ' ற்கு மிகவும் ஏற்றது. 


எப்படி செய்யலாம் என்று இந்த வீடியோ சொல்கிறது......





                                                   நன்றி! நன்றி! நன்றி !

Wednesday, June 14, 2017

இது வித்தியாசமானது !

கத்திரிக்காயில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு  செய்திருக்கிறேன். கத்திரிக்காய் கொஸ்து ,கறி என்றும் செய்திருக்கிறேன்.

 ஆனால், இது சற்றே  வித்தியாசமானது. என் தோழியிடமிருந்துகற்றுக் கொண்ட ரெசிபி. வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானது.

"அப்படியென்ன  புது ரெசிபி இது? " என்கிற உங்கள் கேள்விக்குப் பதில்  இந்த வீடியோவில் உள்ளது.


 Please 'like', ' share' & 'subscribe' too. Do not forget to comment too. Thankyou!


Saturday, May 20, 2017

கெட்ட கொழுப்பைக் குறைக்க.....

கொழுப்பே  கெட்டது தான். இதில்  நல்லது,  கெட்டது  என்று  ......என்ன சொல்ல வருகிறாய் ? என்று சிலர்  யோசிப்பது கேட்கிறது..

உடல் நலத்திற்கு, முக்கியமாய் இதயத்திற்குத் தீங்கு செய்யும் ' LDL' கொழுப்பு மருந்தில்லாமல் கரைய  இந்தப் பொடி உதவும். வீட்டிலேயே  எளிதாக செய்யக் கூடிய  பொடி.  . நம் பாரம்பர்ய  உணவு . .சுவைக்கு நான் கியாரண்டி.

எல்லா வயதினரும்,  உண்ணலாம்.

எப்படி செய்யலாம் என்பதை இணைப்பில் இருக்கும் வீடியோவில் விளக்கியிருக்கிறேன். பாருங்களேன்....




 எப்பொழுதும் போல் இந்த வீடியோவிற்கும், 'Like', 'Share' & 'Subscribe'  செய்து விடுங்கள். உங்களுக்கு நன்றியுடையவளாய் இருப்பேன். நன்றி.


Wednesday, May 3, 2017

இட்லி சாம்பார்!

இட்லியும், சாம்பாரும் பற்றிய பதிவு என்று நீங்கள் நினைத்து  விடப் போகிறீர்கள்.  இது இட்லிக்கான சாம்பார். இதில் துவரம் பருப்பு சேர்ப்பதில்லை.  துவரம் பருப்பு சேர்க்காமல் சாம்பாரா?  என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

செய்முறையை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.

ஒரு எச்சரிக்கை:  செய்முறைப் பார்த்து சாம்பார்  செய்தீர்களானால்  கணக்கில்லாமல் மலை மலையாய் இட்லி செய்ய வேண்டி நேரலாம். சாம்பாரின் சுவை, இட்லிகளை நிமிட நேரத்தில் காலியாக்கி விடும், அபாயம் உண்டு. அதற்காகத் தான் இந்த எச்சரிக்கை.

இதோ வீடியோ:

வீடியோ பார்த்த பின்பு 'Like', 'Share' & 'Subscribe'  செய்ய மறக்க வேண்டாமே! ப்ளீஸ்.......



                                                         நன்றி ! நன்றி!நன்றி!

Friday, September 30, 2016

வெங்காய சட்னி

To read Onion Chutney in English click here.

வெங்காய சட்னி,  தோசைக்கு, இட்லிக்கு  ஏன் சப்பாத்திக்குக் கூட  தொட்டுக் கொள்ளலாம்.

எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?

வெங்காயச்  சட்னி செய்யத் தேவையானவை:
  1. சாம்பார் வெங்காயம் ---5 அல்லது  6.
  2. ( சாம்பார் வெங்காயம் இல்லையெனில்  பெரிய வெங்காயம் ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.)
  3. சிவப்பு மிளகாய்--5 அல்லது 6
  4.  தக்காளிப் பழம்--- 2.
  5.  உப்பு--- தேவைக்கேற்ப 
  6. எண்ணெய்--1 ஸ்புன்.
  7.  கடுகு ---1/2 ஸ்பூன்  

 சட்னி செய்முறை :

 வெங்காயம்  உரித்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயமாயிருந்தால்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியையும்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் , வாணலியில்  எண்ணெய்  ஊற்றி , சூடான பின், முதலில் சிவப்பு மிளகாயைப் போட்டு  வறுத்து எடுத்து வைத்துக்  கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளியைப் போட்டு  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (நன்கு வதக்கி விட வேண்டாம். சுவை மாறி விடும்.)

பிறகு வறுத்த மிளகாயை , உப்புடன் சேர்த்து  மிக்சியில் போட்டு நன்கு  பொடியாக்கிக் கொள்ளவும். அதற்குப் பிறகு வதக்கின வெங்காயம், தக்காளியைப் போட்டு  அரைக்கவும். (நான் மிகவும் நைசாக அரைப்பதில்லை).

கடுகு தாளிக்கவும்.

                                          




வெங்காய சட்னி ரெடி.

வதக்கின தக்காளிக்குப்  பதிலாக புளியை அப்படியே  உபயோகிக்கலாம்.

சட்னியைப் பரிமாறும் போது எல்லையற்ற அன்புடன் பரிமாறுங்கள். உங்களவர்  உங்களை வானளாவப் புகழ்ந்துத் தள்ளி விடுவார் .

சட்னியின் மகிமை எப்படியிருந்தது என்பதை எனக்கு சொல்ல மறக்க வேண்டாம்.

செய்யும் முறையை  வீடியோவில் பதிவு செய்துள்ளேன். இதோ உங்கள் பார்வைக்கு :




உங்களின் மேலான கருத்துக்களை  சொல்லுங்கள்.
வீடியோ பிடித்திருந்தால் ...'LIKE'  மற்றும்  ' SUBSCRIBE' பட்டன்களைத்  தட்டி விட்டு விடுங்கள்.

Saturday, March 26, 2016

பூண்டு வெங்காயச் சட்னி

பூண்டு வெங்காயச் சட்னி,  தோசைக்கு, இட்லிக்கு  ஏன் சப்பாத்திக்குக் கூட  தொட்டுக் கொள்ளலாம்.

எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?

பூண்டுவெங்காயச்  சட்னி செய்யத் தேவையானவை:



  1.  பூண்டு-- 5/6  பற்கள் 
  2. சாம்பார் வெங்காயம் ---5 அல்லது  6.
  3. ( சாம்பார் வெங்காயம் இல்லையெனில்  பெரிய வெங்காயம் ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.)
  4. சிவப்பு மிளகாய்--5 அல்லது 6
  5.  தக்காளிப் பழம்--- 2.
  6.  உப்பு--- தேவைக்கேற்ப 
  7. எண்ணெய்--1 ஸ்புன்.
  8.  கடுகு ---1/2 ஸ்பூன்  

 சட்னி செய்முறை :

பூண்டு , வெங்காயம்  உரித்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயமாயிருந்தால்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியையும்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் , வாணலியில்  எண்ணெய்  ஊற்றி , சூடான பின், முதலில் சிவப்பு மிளகாயைப் போட்டு  வறுத்து எடுத்து வைத்துக்  கொள்ளவும். பிறகு பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டு  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (நன்கு வதக்கி விட வேண்டாம். சுவை மாறி விடும்.)

பிறகு வறுத்த மிளகாயை , உப்புடன் சேர்த்து  மிக்சியில் போட்டு நன்கு  பொடியாக்கிக் கொள்ளவும். அதற்குப் பிறகு வதக்கின பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டு  அரைக்கவும். (நான் மிகவும் நைசாக அரைப்பதில்லை).

கடுகு தாளிக்கவும்.



பூண்டு, வெங்காயம், சட்னி ரெடி.

வதக்கின தக்காளிக்குப்  பதிலாக புளியை அப்படியே  உபயோகிக்கலாம்.

சட்னியைப் பரிமாறும் போது எல்லையற்ற அன்புடன் பரிமாறுங்கள். உங்களவர்  உங்களை வானளாவப் புகழ்ந்துத் தள்ளி விடுவார் .

சட்னியின் மகிமை எப்படியிருந்தது என்பதை எனக்கு சொல்ல மறக்க வேண்டாம்.