Showing posts with label எண்ணெய். Show all posts
Showing posts with label எண்ணெய். Show all posts

Monday, March 26, 2018

தக்காளி சாதம் !

தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போமா? பெரிய கம்ப சூத்திரமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது....

ஒவ்வொருவர் செய்முறையும் சற்றே மாறுபடத்தானே  செய்கிறது.

வாணலியில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்த பின்பு, கடுகு தாளித்து,.....

இருங்கள்......இருங்கள்......

 சொல்வதை விடவும், செய்து காட்டி விடுகிறேனே.....



 நன்றி ! நன்றி!

Monday, January 15, 2018

புளியோதரை !

இன்றைய வெரைட்டி ரைஸ்  ரெசிபியில்  புளியோதரை ரெசிபி ....

இதோ வீடியோவுடன்...



நன்றி !நன்றி

Monday, November 20, 2017

கார சாரமான பச்சை மிளகாய் சட்னி

இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் போரடித்து விட்டதா?
குடும்பத்தினர் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களா?  இந்த கார சார சட்னி செய்து பாருங்கள்.... உன்னைப் போல் உண்டா என்கிற புகழ்ச்சிக்கடலில் உங்களைத்  தள்ளி திக்கு முக்காட செய்து விடுவார்கள் பாருங்களேன்.....


                                                      நன்றி ! நன்றி

Friday, November 17, 2017

கார சாரமான வெங்காய சட்னி!

இட்லி, தோசைக்கு பக்கத் துணையாக  காரசாரமான வெங்காய சட்னி.......நினைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறதே........

அந்த வெங்காய சட்னி செய்முறை தான் இந்த வீடியோவில் இருக்கிறது.....



Thankyou! Thankyou!

Wednesday, November 15, 2017

ஆளி விதைப் பொடி| Flax seeds idli podi.

Flax seeds  என்று அழைகப்படும்  ஆளி  விதை உடலிற்கு ஆரோக்கியப் பலன்கள் நிறைந்தது என்று பரவலாக பேசப்படுகிறது.  Omega3 fatty acids மற்றும் நார்சத்து நிறைந்து காணப்படும் இதை உபயோகித்து நாம் இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் மிளகாய்  பொடி செய்யும் முறை பார்ப்போம்.

             

Thankyou

Friday, November 10, 2017

குழிப் பணியாரம்.!

இட்லி மாவில், இட்லி செய்யலாம், தோசை செய்யலாம்,..... குழிப் பணியாரம் செய்யலாமா?

இதோ செய்திருக்கிறேன்  பாருங்கள்....



                                                                   நன்றி !நன்றி!

Monday, November 6, 2017

வாழைக்காய் பொடி !

வாழைக்காய் பொடி செய்முறைக்கு குறிப்பு வீடியோ இதோ:



உங்களின் மேலானக் கருத்துக்கள் ...ப்ளீஸ் .....

Saturday, November 4, 2017

தக்காளி தொக்கு!

தக்காளி தொக்கு செய்முறை வீடியோ  இணைத்திருக்கிறேன்.விரைவாகவும்  செய்து விடலாம். சுவையோ அபாரமாய் இருக்கும். செய்து பார்த்து, உங்களின் மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,,,,,,,


நன்றி! நன்றி !

Tuesday, October 31, 2017

வெந்தய தோசை!

டையாபிடிசைக் கண்ட்ரோல் செய்யும் வெந்தய தோசை செய்முறை விளக்க வீடியோ:


உங்களின்  மேலான கருத்துக்களை  எதிர்பார்க்கிறேன். நன்றி .

Tuesday, August 1, 2017

பீன்ஸ் பருப்புசிலி.

பீன்சில்  கறி ட்டுமே செய்து பழகியிருந்த எனக்கு  அதில் உசிலி என்பது சற்று புதிது. நண்பர் வீட்டில் சாப்பிட்ட போது என்னவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட,  அங்கேயே, அப்பொழுதே செய்யக் கற்றுக் கொண்டேன்.

அட....... இத்தனை வயதாகியும்  இப்ப தான் பருப்புசிலி கற்றுக் கொள்கிறாயா? என்று கேட்காதீர்கள்.  நான் மேலே சொன்ன நிகழ்வு நடந்தது கிட்டத்தட்ட முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பாக.

இப்பொழுது மிக அருமையாக செய்கிறேன் .

சந்தேகமிருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள் .....நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.


Wednesday, June 14, 2017

இது வித்தியாசமானது !

கத்திரிக்காயில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு  செய்திருக்கிறேன். கத்திரிக்காய் கொஸ்து ,கறி என்றும் செய்திருக்கிறேன்.

 ஆனால், இது சற்றே  வித்தியாசமானது. என் தோழியிடமிருந்துகற்றுக் கொண்ட ரெசிபி. வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானது.

"அப்படியென்ன  புது ரெசிபி இது? " என்கிற உங்கள் கேள்விக்குப் பதில்  இந்த வீடியோவில் உள்ளது.


 Please 'like', ' share' & 'subscribe' too. Do not forget to comment too. Thankyou!


Monday, May 15, 2017

மைசூர் ரசம் | Mysore Rasam.

மைசூர்  ரசம் பெயர்க் காரணம்  தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பெயர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.  ரசம்  ருசியாய் இருந்தால் சரி.

இந்த ரசம் மிக ருசியாய் இருக்கும்.  அதற்கு நான் கியாரண்டி.  செய்முறை விளக்கத்தை வீடியோவாக்கி விட்டேன்.

செய்து பாருங்கள்..... 'Share', 'like' & 'subscribe' செய்து விடுங்களேன் ப்ளீஸ் .....

நீங்கள் 'subscribe' செய்வதற்கு இங்கே க்ளிக் செய்து விடுங்கள்....



நன்றி! நன்றி! நன்றி!

Wednesday, May 10, 2017

இட்லி மிளகாய் பொடி !

இட்லி தோசையா? எங்களுக்கு சாம்பார், சட்னி தான் வேண்டும் என்று சொல்லும் ரசிகர்கள்  இருக்கிறார்கள்.  வேறு சிலர் சாம்பாரோ, சட்னியோ, அதனுடன் எங்களுக்கு  நல்லெண்ணெயில் குழைத்த  மிளகாய்ப் பொடி அவசியம் வேண்டும்  என்று சொல்லும் மிளகாய்ப் பொடி ரசிகர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

இல்லத்தரசிகளுக்கோ  இட்லி மிளகாய்ப்  பொடி  வiரப் பிரசாதம் என்று சொல்லலாம்.  சட்னி, சாம்பார் செய்ய முடியவில்லையா ?  மிளகாய்ப் பொடி கைவசம் இருந்தால் கவலையே வேண்டாம்.
 ஆனால், மிளகாய்ப் பொடி செய்முறையில் சில நுணுக்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
அதனால், இட்லி மிளகாய்ப் பொடி செய்யும் போது  படம் பிடித்து விட்டேன். படம் எப்படி இருக்கிறது என்று பார்த்து உங்கள் மேலானக் கருத்துகளை சொல்லுங்களேன்.


உங்கள் நண்பர்களிடம் இந்த  You Tube வீடியோவை 'Share' செய்து விடுங்கள்.  வீடியோவிற்குக் கீழே உள்ள 'Like'  மற்றும் 'Subscribe' பட்டன்களை ஓங்கி  ஒரு அடி அடித்து விட்டு,  நகருங்கள்.

Monday, April 24, 2017

வாழைப்பூ வடை!

அன்று மார்கெட்டிற்கு சென்றிருந்த போது ,வாழைப்பூ  கண்ணில் பட சட்டென்று ஒன்று வாங்கி வந்து விட்டேன். அதை ஆய்ந்து கள்ளன் எடுத்து, நறுக்கி.....சலித்துப் போய்விட்டது.

குடும்பத்தாரின் உடல் நலத்தை முன்னிட்டு, வாழைப்பூவை சரி செய்து, மறு நாள்  உசிலியாக செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தேன் . ஆனால் வீட்டில் எல்லோரும் வாழைப்பூ வடை செய்தால் தான் ஆயிற்று என்று சொல்லவே , உசிலி என்று முடிவு செய்திருந்ததை மாற்றி வடையாக செய்து விட்டேன்.

வாழைப்பூ  வடை செய்முறை  வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு:
        
                           

உங்களின் மேலானக் கருத்துகளை வீடியோவிற்குக் கீழே  இருக்கும் கருத்துப் பெட்டிக்குள்  இட்டால் கூடுதல் மகிழ்ச்சி.
                                                          நன்றி!நன்றி!