Showing posts with label தக்காளி. Show all posts
Showing posts with label தக்காளி. Show all posts

Friday, November 17, 2017

கார சாரமான வெங்காய சட்னி!

இட்லி, தோசைக்கு பக்கத் துணையாக  காரசாரமான வெங்காய சட்னி.......நினைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறதே........

அந்த வெங்காய சட்னி செய்முறை தான் இந்த வீடியோவில் இருக்கிறது.....



Thankyou! Thankyou!

Saturday, November 4, 2017

தக்காளி தொக்கு!

தக்காளி தொக்கு செய்முறை வீடியோ  இணைத்திருக்கிறேன்.விரைவாகவும்  செய்து விடலாம். சுவையோ அபாரமாய் இருக்கும். செய்து பார்த்து, உங்களின் மேலானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,,,,,,,


நன்றி! நன்றி !

Monday, May 15, 2017

மைசூர் ரசம் | Mysore Rasam.

மைசூர்  ரசம் பெயர்க் காரணம்  தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பெயர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.  ரசம்  ருசியாய் இருந்தால் சரி.

இந்த ரசம் மிக ருசியாய் இருக்கும்.  அதற்கு நான் கியாரண்டி.  செய்முறை விளக்கத்தை வீடியோவாக்கி விட்டேன்.

செய்து பாருங்கள்..... 'Share', 'like' & 'subscribe' செய்து விடுங்களேன் ப்ளீஸ் .....

நீங்கள் 'subscribe' செய்வதற்கு இங்கே க்ளிக் செய்து விடுங்கள்....



நன்றி! நன்றி! நன்றி!

Wednesday, May 3, 2017

இட்லி சாம்பார்!

இட்லியும், சாம்பாரும் பற்றிய பதிவு என்று நீங்கள் நினைத்து  விடப் போகிறீர்கள்.  இது இட்லிக்கான சாம்பார். இதில் துவரம் பருப்பு சேர்ப்பதில்லை.  துவரம் பருப்பு சேர்க்காமல் சாம்பாரா?  என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

செய்முறையை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.

ஒரு எச்சரிக்கை:  செய்முறைப் பார்த்து சாம்பார்  செய்தீர்களானால்  கணக்கில்லாமல் மலை மலையாய் இட்லி செய்ய வேண்டி நேரலாம். சாம்பாரின் சுவை, இட்லிகளை நிமிட நேரத்தில் காலியாக்கி விடும், அபாயம் உண்டு. அதற்காகத் தான் இந்த எச்சரிக்கை.

இதோ வீடியோ:

வீடியோ பார்த்த பின்பு 'Like', 'Share' & 'Subscribe'  செய்ய மறக்க வேண்டாமே! ப்ளீஸ்.......



                                                         நன்றி ! நன்றி!நன்றி!

Sunday, December 11, 2016

தக்காளி கொஜ்ஜூ

To read in English click here.
நேற்று  மதியம் டிவியை 'ஆன்' செய்து பார்த்தால்,ஒரு 'செஃப்' நிறைய தக்காளிகளை , சின்ன சின்னதாக நறுக்கிக் கொண்டிருந்தார். இவ்வளவு தக்காளிகளை  நறுக்கிக் கொண்டிருக்கிறாரே .....என்னதான் செய்யப் போகிறார் என்று ஆவலாகப் பார்க்கத் தொடங்கினேன்.

பேச்சு வாக்கில் அவர் செய்வது தக்காளி  கொஜ்ஜூ என்று புரிய வந்தது. செய்முறை எளிதாக இருக்கவே, நானும் ,அதை  உடனே செய்து பார்த்து விட்டேன்.  நன்றாகவே இருந்தது. அதையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தயாரிப்பது   மிக எளிது . சுவையோ அபாரம் .

 எப்படி செய்யலாம் என்று பார்ப்போமே

தக்காளி கொஜ்ஜு செய்யத் தேவையாவை:

தக்காளி ---கால் கிலோ.
மஞ்சள் பொடி ---சிறிது.
மிளகாய்ப் பொடி/சாம்பார்பொடி ----- மூன்று ஸ்பூன்.
உப்பு-----தேவைக்கேற்ப.
உடைத்த வெல்லம்--- அரை கைப்பிடி .
தாளிக்க  எண்ணெய் --2 ஸ்பூன்
வெந்தயம்-----1 ஸ்பூன்.
பெருங்காயப்பொடி சிறிது.

செய்முறை:

தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை கேஸில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பின்பு  கடுகு போடவும். கடுகு வெடிக்கும் போதே  வெந்தயம் போடவும்.  வெந்தயம் சிவந்தவுடன், நறுக்கிய தகாளிகளைப் போட்டு , உப்பு, மஞ்சள் தூள்,  மிளகாய் பொடி, வெல்லம், ஆகிய  எல்லாவற்றையும்  போட்டு நன்கு பிரட்டிவிடவும்.
பிறகு  கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி , கேசை  சிம்மில் வைத்து, தட்டால் மூடி விடவும்.  அவ்வப்பொழுது  கிளறி  விடவும். தக்காளி நன்கு வெந்த பிறகு , தட்டை எடுத்து விடவும். நன்கு சுருள வதக்கிக் கொள்ளவும்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ஏன் சாதத்திற்குக்  கூட இந்த  தக்காளி கொஜ்ஜு நல்ல தோழி. அபார ருசி இருக்கும் .



உங்கள் வீட்டில், தக்காளி கொஜ்ஜூவிற்கு வரவேற்பு எப்படி இருந்தது என்று எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை.