Sunday, December 11, 2016

தக்காளி கொஜ்ஜூ

To read in English click here.
நேற்று  மதியம் டிவியை 'ஆன்' செய்து பார்த்தால்,ஒரு 'செஃப்' நிறைய தக்காளிகளை , சின்ன சின்னதாக நறுக்கிக் கொண்டிருந்தார். இவ்வளவு தக்காளிகளை  நறுக்கிக் கொண்டிருக்கிறாரே .....என்னதான் செய்யப் போகிறார் என்று ஆவலாகப் பார்க்கத் தொடங்கினேன்.

பேச்சு வாக்கில் அவர் செய்வது தக்காளி  கொஜ்ஜூ என்று புரிய வந்தது. செய்முறை எளிதாக இருக்கவே, நானும் ,அதை  உடனே செய்து பார்த்து விட்டேன்.  நன்றாகவே இருந்தது. அதையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தயாரிப்பது   மிக எளிது . சுவையோ அபாரம் .

 எப்படி செய்யலாம் என்று பார்ப்போமே

தக்காளி கொஜ்ஜு செய்யத் தேவையாவை:

தக்காளி ---கால் கிலோ.
மஞ்சள் பொடி ---சிறிது.
மிளகாய்ப் பொடி/சாம்பார்பொடி ----- மூன்று ஸ்பூன்.
உப்பு-----தேவைக்கேற்ப.
உடைத்த வெல்லம்--- அரை கைப்பிடி .
தாளிக்க  எண்ணெய் --2 ஸ்பூன்
வெந்தயம்-----1 ஸ்பூன்.
பெருங்காயப்பொடி சிறிது.

செய்முறை:

தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை கேஸில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பின்பு  கடுகு போடவும். கடுகு வெடிக்கும் போதே  வெந்தயம் போடவும்.  வெந்தயம் சிவந்தவுடன், நறுக்கிய தகாளிகளைப் போட்டு , உப்பு, மஞ்சள் தூள்,  மிளகாய் பொடி, வெல்லம், ஆகிய  எல்லாவற்றையும்  போட்டு நன்கு பிரட்டிவிடவும்.
பிறகு  கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி , கேசை  சிம்மில் வைத்து, தட்டால் மூடி விடவும்.  அவ்வப்பொழுது  கிளறி  விடவும். தக்காளி நன்கு வெந்த பிறகு , தட்டை எடுத்து விடவும். நன்கு சுருள வதக்கிக் கொள்ளவும்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ஏன் சாதத்திற்குக்  கூட இந்த  தக்காளி கொஜ்ஜு நல்ல தோழி. அபார ருசி இருக்கும் .



உங்கள் வீட்டில், தக்காளி கொஜ்ஜூவிற்கு வரவேற்பு எப்படி இருந்தது என்று எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை.

4 comments:

  1. Replies
    1. வெல்லம் போட்டு செய்தால் சுவை கூடும் செய்து பாருங்கள். நன்றி சார் உங்கள் கருத்திற்கு.

      Delete
  2. கொஜ்ஜு நல்லா கலர்ஃபுல்லா இருக்கு !

    வெல்லம் தவிர்த்து தக்காளியை அரைத்து, வெந்தயம் & கடுகு வறுத்துப் பொடித்து சேர்ப்பேன்.

    ஒரு சந்தேகங்க, கொஜ்ஜுனா தொக்கு அ துவையலா ?

    ReplyDelete
    Replies
    1. //கொஜ்ஜுனா தொக்கு அ துவையலா ?// எனக்கும் தெரியாது சித்ரா. டிவியில் பார்த்தது. செஃப் செய்யும் போது இந்தப் பேரைத் தான் சொன்னார். பார்க்க நன்றாக இருந்ததால் செய்து பார்த்தேன் . வீட்டில் அமோக வரவேற்பு.
      வெல்லம் சேர்த்துப் பாருங்கள் . ருசி கூடும்.
      கொஜ்ஜுவை ரசித்துப் படித்ததற்கு நன்றி சித்ரா.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்