Friday, April 28, 2017

கொத்தமல்லி துவையல்/ சட்னி

அன்று தோழி கமலி என் வீட்டிற்கு விஜயம்.

" அட.... கமலியா ....வா வா...."  நான் வரவேற்றேன்.

அவளுக்கு ஜில்லென்று  எலுமிச்சை ஜூஸ் கொடுத்து விட்டு பேச உட்கார்ந்ததில் நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.

இவளுக்கு சாப்பிட ஒன்றும் கொடுக்கவில்லையே என்று நினைவு வர.........அவளுக்குத் தோசை வார்த்துக் கொடுத்தேன். அதற்கு ஜோடியாக  கொத்தமல்லி சட்னி  வைத்து சாப்பிட சொன்னேன்.

" அட.... ராஜி.... இந்த கொத்தமல்லை சட்னி  படு ஜோர்.  வித்தியாசமாய் இருக்கிறதே. அபார ருசி "  நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் .

நானோ பெருமையாய் ,"வெங்காயம் சேர்த்து  அரைத்தேன் கமலி." என்றேன்.

"வெங்காயமா... கொத்தமல்லியுடனா ?  அப்புறம்......? " இழுத்தாள் கமலி.

"அப்புறம்........ விழுப்புரம் " நான் நக்கலடித்து விட்டு ,

" இந்த வீடியோவைப் பார்த்துக் கொள்."  என்று  என் ஃபோனை அவளிடம் நகர்த்தினேன்..

நீங்களும் தான் பாருங்களேன். சட்டென்று செய்து விடலாம். ருசியோ அபாரம்.



      'Share', 'Like' & 'Subscribe' செய்ய  மறக்க வேண்டாமே  ப்ளீஸ் ....
                                                    நன்றி! நன்றி!

Monday, April 24, 2017

வாழைப்பூ வடை!

அன்று மார்கெட்டிற்கு சென்றிருந்த போது ,வாழைப்பூ  கண்ணில் பட சட்டென்று ஒன்று வாங்கி வந்து விட்டேன். அதை ஆய்ந்து கள்ளன் எடுத்து, நறுக்கி.....சலித்துப் போய்விட்டது.

குடும்பத்தாரின் உடல் நலத்தை முன்னிட்டு, வாழைப்பூவை சரி செய்து, மறு நாள்  உசிலியாக செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தேன் . ஆனால் வீட்டில் எல்லோரும் வாழைப்பூ வடை செய்தால் தான் ஆயிற்று என்று சொல்லவே , உசிலி என்று முடிவு செய்திருந்ததை மாற்றி வடையாக செய்து விட்டேன்.

வாழைப்பூ  வடை செய்முறை  வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு:
        
                           

உங்களின் மேலானக் கருத்துகளை வீடியோவிற்குக் கீழே  இருக்கும் கருத்துப் பெட்டிக்குள்  இட்டால் கூடுதல் மகிழ்ச்சி.
                                                          நன்றி!நன்றி!

Thursday, April 20, 2017

தேங்காய் சட்னி !



நான்  'Rajisivams kitchen' You Tube Channel  ஆரம்பித்ததிலிருந்து , சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ,  சமையலறையில் கேமிரா  சரியாக செட் ஆகியிருக்கிறதா என்பதில் அதிக அக்கறை எனக்கு என்று வீட்டில் எல்லோரும் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வதை உண்மையாக்கி விட்டேன். தேங்காய் சட்னியையும் விடவில்லை . படமெடுத்தாச்சு. பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லி விடுங்கள்.  வீடியோப் பார்த்த பின் மறக்காமல்  ஷேர் செய்து விடுங்கள்.

அப்படி ஷேர் செய்ய மறந்து விட்டால் நாளை நீங்கள் சாப்பிடும் சட்னியில் உப்பு அதிகமாகி விடும், சாத்தியக் கூறுகள் அதிகமாகும் அபாயம் உள்ளது.t

ஷேர்  செய்து வரும் நண்பரகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

இதோ தேங்காய் சட்னி வீடியோ :



'Like', 'Share' & 'Subscribe'  செய்யும் நண்பர்களுக்கு  மீண்டும் எனது  நன்றிகள் பல.

Monday, April 17, 2017

பருப்புத் துவையலுக்கு எது இணை?

உலகம் சுற்றும் வாலிபனான  என் மகன் எப்பொழுது தரையிறங்கினாலும், அவன்  விருபப்பட்டுக் கேட்பது பருப்புத் துவையலும், வத்தக் குழம்பும் தான்.     
'' உலகில்  பல இடங்களில் சாப்பிட்டிருக்கிறேன்.என்ன தான் வெண்ணெயும், க்ரீமுமே கொட்டி கொட்டி செய்தாலும்,  அவையெல்லாம் நம்   பருப்புதுவையலிற்கும், வத்தக் குழம்பிற்கும் ஈடாகுமா ?" என்று அங்கலாய்ப்பான்.

உங்களுக்கும் 'பருப்புத்துவையல்,வத்தக்குழம்பு 'ஜோடியைப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.

நான் செய்யும் வத்தக்குழம்பு செய்முறை பார்க்க  இங்கே ' க்ளிக்' செய்யவும் .

பருப்புத் துவையல் எப்படி செய்வது என்று கீழிருக்கும்  வீடியோவில் சொல்கிறேன்.



           உங்களின் மேலான கருத்துக்கள் என்னை மேம்படுத்த உதவும்.
                                                           நன்றி! நன்றி!


Friday, April 14, 2017

மாங்காய் பச்சடி

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு அன்று எத்தனை  இனிப்பு வகை செய்தாலும், மாங்காய் பச்சடி இல்லாமல் புத்தாண்டா?  நான் மட்டும் செய்யாமல் விடுவேனா என்ன? செய்தேன் மிக அருமையாக வந்திருந்தது. 

அருமையாய் அமைந்ததை வீடியோ எடுத்துப் பதிவிட்டுக் கொண்டால் என்றாவது உபயோகமாக இருக்குமே என்று படம் பிடித்துக் கொண்டேன்.

பச்சடி சுவைத்த பின் என்னவர்  கேட்டார்," எல்லாம் சரி. முக்கியமான ஒன்றை  அதில் சேர்க்க மறந்து விட்டாயே " என்று.

அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.  ஆமாம்.......ஸ்........மறந்து விட்டேன். ஆனால் அது போடாமல் இருந்ததாலும்  சுவையில் எந்த மாற்றமும்  இல்லை. என்னவென்று  யோசிக்கிறீர்களா?

பாருங்கள் உங்களுக்கேப் புரியும் :-


    உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்ய மறக்க வேண்டாமே! நன்றி ! நன்றி!

Tuesday, April 11, 2017

வத்தக் குழம்பு

'வத்தக் குழம்பு' என்பதை விடவும் 'வற்றல் குழம்பு' என்பதே சரி என்றே நினைக்கிறேன் . வத்தக் குழம்பு  என்று சொன்னால் எளிதாக எல்லோருக்கும் விளங்கும் என்பதால்  அதையே தலைப்பாக்கி விட்டேன்.

வத்தக் குழம்பு செய்யத் தேவையானவை :


புளி  ஒரு சின்ன உருண்டை. ( கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் பொடி  - கால் ஸ்பூன்.
சாம்பார் பொடி - 2-3 ஸ்பூன்.
முருங்கைக்காய்  நறுக்கியது .
உப்பு  - தேவைக்கேற்ப


இன்னும் என்னென்ன தேவை, எப்படி செய்வது என்று நான் சொல்வதை விடவும் ,செய்முறையை வீடியோவில் பார்த்தால் சட்டென்று புரிந்து விடும் என்பதால்

இதோ  வீடியோ:



வீடியோவை  உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் 'ஷேர்'  செய்ய மறக்க வேண்டாம். ' ஷேரிங் '  பற்றி (ஓய்வு பெற்ற ) ஆசிரியையான நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்களாம்.

                                                              நன்றி !

Saturday, April 8, 2017

பூண்டு பொடி

உங்கள் இதயத்திற்கு  இதமான பொடி வகை ஒன்றை இங்கே பகிர்கிறேன்.
நான் இங்கே சொல்லப் போவது பூண்டுப் பொடி.


எப்படி செய்ய வேண்டுமென்பதை  நான் சொல்வதை விட வீடியோவைப் பார்த்தால் நன்கு விளங்கும்.

 

  

நீங்களும் செய்து பாருங்கள்..
சாதத்தோடு பூண்டுப் பொடி பரிமாறிப்  பாருங்கள்  அலாதியான ருசியுடன் , உங்கள் அன்புக்குரியவர்களின்  இதயத்தையும்  ஆரோக்கியமாகப் பாதுகாத்துக் கொடுக்கும். நீங்களும் சாப்பிட மறக்க வேண்டாம். உங்கள் இதயமும் பலப்படட்டும் .