Thursday, August 31, 2017

இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்!

சில சமயம்,  விருந்தாளிகள் சாப்பிட   வரும்  போது, காலி ஊறுகாய் பாட்டில் நம்மைப்  பார்த்து நக்கலாய் சிரிக்கும்.  உடனே ஊறுகாய் வாங்கி வர உங்களவரும்  முகத்தை சுளிக்கலாம்.  " இருப்பதை வைத்து அட்ஜஸ்ட்  செய்யேன் "  போன்ற அறிவுரைகள்  பறந்து வரலாம்.

ஆனால் மாங்காய் கைவசம்  இருந்தால்  சட்டென்று ஐந்து நிமிடத்தில்,  நாக்கில் நீர் வரவழைக்கும் ஊறுகாய் செய்து விடலாம்.

எப்படி என்று கேட்பவர்கள் கீழிருக்கும் வீடியோவைப் பாருங்களேன்.:





நன்றி !

Friday, August 11, 2017

மைக்ரோ க்ரீன்ஸ் சப்பாத்தி!

மைக்ரோ கிரீன்ஸ்  சப்பாத்தி !

பேரைப் பார்த்து, செய்வதற்கு  சையின்ஸ்  லேப்  வேண்டியிருக்குமோ  என்று சந்தேகப்பட வேண்டாம்.

நம் வீட்டு சமையலறையும், பூத்தொட்டியும் போதும்.


எப்படி செய்ய வேண்டுமென்பது,  இந்த வீடியோ பார்த்தால்  புரிந்து விடும்.

பார்த்து விட்டீர்களா?  அட.....இவ்வளவு  சுலபமா?  என்று நீங்கள் சொல்வது  கேட்கிறது.


Tuesday, August 1, 2017

பீன்ஸ் பருப்புசிலி.

பீன்சில்  கறி ட்டுமே செய்து பழகியிருந்த எனக்கு  அதில் உசிலி என்பது சற்று புதிது. நண்பர் வீட்டில் சாப்பிட்ட போது என்னவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட,  அங்கேயே, அப்பொழுதே செய்யக் கற்றுக் கொண்டேன்.

அட....... இத்தனை வயதாகியும்  இப்ப தான் பருப்புசிலி கற்றுக் கொள்கிறாயா? என்று கேட்காதீர்கள்.  நான் மேலே சொன்ன நிகழ்வு நடந்தது கிட்டத்தட்ட முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பாக.

இப்பொழுது மிக அருமையாக செய்கிறேன் .

சந்தேகமிருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள் .....நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.