Saturday, December 7, 2013

தேங்குழல் செய்யலாம் வாங்க!



தேங்குழல் செய்யத் தேவையானவை:

பச்சரிசி  5 கப்
வெள்ளை உளுத்தம்பருப்பு   1 கப்
பெருங்காயம் சிறிதளவு.
ஜீரகம்  அல்லது எள் (கருப்பு /வெள்ளை)
வெண்ணெய்  50 கிராம் அளவு.
உப்புத்  தேவையான அளவு.

பொரிப்பதற்கு எண்ணெய் .

பச்சரிசி , உளுத்தம் பருப்பு  இரண்டையும் ஒன்றாகப்  போட்டு மெஷினில் அரைத்துக்  கொள்ளவும்.  நன்றாக நைசாக  இருக்கட்டும்.

மாவு அரைக்கும்  வசதி இல்லாத இடத்திலிருப்பவர்கள் 5 கப் அரிசி மாவும், ஒரு கப் உளுத்த மாவும்  ஒன்றாக கலந்து  செய்யலாம்.

மாவு சல்லடையில் அரைத்த மாவை ஒரு முறைக்கு இரு முறை  சலித்துக் கொள்ளவும்.அரிசி மாவும் உளுத்தமாவும் சரியாக கலக்கவில்லை என்றால்
எண்ணெயில்  பிழிந்தவுடன்  வெடிக்கும் அபாயம் உண்டு.

சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு , தேவையான உப்பைப் போடவும். பெருங்காயம், ஜீரகம், வெண்ணெய்   போட்டு நன்கு கலந்து , கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீர் விட்டுப் பிசையவும்.

அடுப்பில் ,எண்ணெய்  வைத்துக் காய்ந்ததும் , தேங்குழல்  அச்சில், மாவைப் போட்டு , எண்ணெயில் பிழியவும். பிழிந்தவுடன்  வரும் 'சல சல ' சத்தம்  சிறிது நேரத்தில் அடங்கி விடும். அந்த சமயத்தில்  தேங்குழலை  எடுத்து விட வேண்டும் .

எடுத்து தட்டில் வைத்து , வீட்டினருக்குக் கொடுத்து  அசத்தவும்.
எண்ணெய்  அதிகமாக  குடிக்காத முறுக்கு இது.  அதனால் தைரியமாக அவ்வப்போது செய்யலாம்.

செய்து சாப்பிட்டுப் பார்த்து எனக்கு  கருத்து சொல்லுங்கள்.


image courtesy----google.

4 comments:

  1. சமையல் ப்ளாக் ஆரம்பித்ததற்கு முதலில் வாழ்த்துகள். விதவிதமாக நொறுக்ஸ் செய்து அசத்த மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா மீண்டும் வாழ்த்துவதற்கு.

      Delete
  2. படத்தைப் பார்த்ததுமே "கேரட் இனிக்காதா? பாவக்காய் கசக்காதா?" என்றெல்லாம் சந்தேகம் கேட்ட ராஜ் அவர்களா இப்படி கண்ணையும், மனதையும் கொள்ளை கொள்ளும் முறுக்குகளை செய்து அசத்தியது !!!!! திருஷ்டி வந்திடப்போவுது. குறிப்பும் சூப்பர். இன்று நானும் செய்ய முடிவெடுத்துவிட்டேன்.

    படத்தின்மேல் உங்க பெயரை எழுதிடுங்க !!

    ReplyDelete
    Replies
    1. ஒரு ரகசியம் சொல்கிறேன். இங்கு பதிவாகப் போவது பெரும்பாலும் பாரம்பர்ய வகை உணவுக் குறிப்புகளாகத் தான் இருக்கப் போகிறது.அதுவும் என் அம்மாவின் உதவியுடன் இந்த பிளாக் வலம் வரப் போகிறது. என் வீட்டினர், உறவினரிடையே பெரும் வரவேற்பைப் பெரும் என்று நினைக்கிறேன். என் அம்மா மிக அருமையாக சமைப்பார்.
      அவரிடம் என் சந்தேகங்களைத் தெளிந்து கொண்டு, பதியப் போகிரேன். எப்பவும் போல் உங்களின் ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்