கீரை வகைகளிலேயே முருங்கைக் கீரைக்குத் தனி மகத்துவம் உண்டு . ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றக் கீரை என்றுக் கூட சொல்லலாம். இணையத்தைத் துழாவினால் இந்தக் கீரையின் மகத்துவம் புரியும்.
சர்க்கரை வியாதியும், ரத்தக் கொதிப்பும் முருங்கைக் கீரையின் முன் மண்டியிடும் என்று மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. ஆனாலும் எல்லாக் கீரையைப் போல் இது சரளமாகக் கிடைப்பதில்லை.கிடைக்கும் போதும் வாங்கி, முருங்கைக் கீரையைக் கூட்டு செய்வது வழக்கம். ஆனால் முருங்கைக் கீரையைப் பொடியாக செய்து வைத்துக் கொண்டால் தினமும் முருங்கைக் கீரை ஒரு ஸ்பூனாவது சேர்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
எப்படி செய்வது பார்க்கலாமா?
அதற்குத் தேவையானவை
முருங்கைக் கீரையை ஆய்ந்து , நன்கு சுத்தம் செய்து விட்டு, நிழலில் நான்கைந்து நாட்களுக்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு பெருங்காயம், மிளகாய், தனியா எல்லாவற்றையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெறும் வாணலியில் உலர்ந்த முருங்கைக் கீரையைப் போட்டு ( சில வினாடிகள் மட்டுமே) லேசாக வறுத்துக் கொள்ளவும்.
மிக்சியில் வறுத்த மிளகாய், தனியா , பெருங்காயம், உப்பு போட்டு நன்குப் பொடி செய்துக் கொள்ளவும். அதனுடன் முருங்கைக் கீரையைப் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
பொடியை எடுத்துப் பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
பி.கு : தனியாவிற்குப் பதிலாக துவரம் பருப்புப் போட்டும் முருங்கைக் கீரைப் பொடி செய்யலாம்.
தனியா வாசனைத் தூக்கலாக இருப்பதால், சற்றே சுவைக் கூடுதலாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்துக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்.

- தனியா ஒரு டம்ளர்.
- சிவப்பு மிளகாய் ஒன்று அல்லது இரண்டு ( உங்கள் காரத்திற்கேற்பக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்)
- பெருங்காயம் சிறிது.
- முருங்கைக் கீரை சுமார் இரண்டுக் கைப்பிடியளவு.( விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம்)
- உப்பு தேவைக்கேற்ப .
- எண்ணெய் (வறுப்பதற்கு) ஒரு டீ ஸ்பூன் .
முருங்கைக் கீரையை ஆய்ந்து , நன்கு சுத்தம் செய்து விட்டு, நிழலில் நான்கைந்து நாட்களுக்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு பெருங்காயம், மிளகாய், தனியா எல்லாவற்றையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெறும் வாணலியில் உலர்ந்த முருங்கைக் கீரையைப் போட்டு ( சில வினாடிகள் மட்டுமே) லேசாக வறுத்துக் கொள்ளவும்.
மிக்சியில் வறுத்த மிளகாய், தனியா , பெருங்காயம், உப்பு போட்டு நன்குப் பொடி செய்துக் கொள்ளவும். அதனுடன் முருங்கைக் கீரையைப் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
பொடியை எடுத்துப் பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
பி.கு : தனியாவிற்குப் பதிலாக துவரம் பருப்புப் போட்டும் முருங்கைக் கீரைப் பொடி செய்யலாம்.
தனியா வாசனைத் தூக்கலாக இருப்பதால், சற்றே சுவைக் கூடுதலாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்துக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
முருங்கைக் கீரையில் பொடியா !! பார்க்கும்போதே கொத்துமல்லி வாசனையுடன் ஹும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநம் ஊர் வெயிலுக்கு உலர்த்தலாம். ஆனால் இங்கு ? வீணாகிவிட்டால் ? இப்போது வாராவாரம் கிடைக்கிறது. விலை அதிகம் அதான் யோசிக்கிறேன்.
முருங்கைக் கீரையை நிழலில் தான் உலர்த்த வேண்டும் சித்ரா. மைக்ரோ வேவில் சில வினாடிகள் வைத்து எடுத்துப் பாருங்கள். உலர்ந்து விடும் என்று நினைக்கிறேன்.
Deleteநீங்கள் சொல்வது போல் , கொத்தமல்லி வாசனை தான் தெரியும் ,.நாமே சொன்னால் தான் அதில் முருங்கைக் கீரை இருப்பது தெரிய வரும்.
நன்றி சித்ரா உங்கள் கருத்துக்கு.
வணக்கம்!
ReplyDeleteஇன்றைய வலைச்சரம் வலைப் பூவில்
தங்களது பதிவு சிறந்த பதிவாக தேர்வானமைக்கு
குழலின்னிசையின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(உறுப்பினராக தாங்கள் இணைந்து ,"குழலின்னிசையை" தொடர வேண்டுகிறேன்! நன்றி!)
Thanks
ReplyDelete