இந்தத் தயாரிப்பு மிகவும் பிரபலம் இல்லை எனலாம்.. என் அம்மா வீட்டில் செய்வதுண்டு. வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடமிருந்து எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் இந்த ரெசிபியை இங்கே பகிர்கிறேன். செய்து தான் பாருங்களேன். உங்கள் "உள்ளம் கேட்குமே மோர்."
வெங்காய மாங்காய் செய்வது எப்படி என்று பார்ப்போமா?அடுப்புத் தேவைப்படாத தயாரிப்பு.
தேவையானவை
செய்முறை:
பொடியாக நறுக்கிய வெங்காயம், மாங்காய், உப்பு, சர்க்கரை ,மஞ்சள் பொடி, சாம்பார் பொடி எல்லாவற்றையும் ஒரு கின்னத்தில் போட்டு கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து, கரண்டியால் கலந்து விடவும்.
ருசி பார்க்கவும். உங்கள் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் நீங்கள் அதிகப் படுத்திக் கொள்ளலாம். விருப்பமிருந்தால் கடுகு தாளிக்கலாம்.
மாங்காயுடன் ,வெங்காயம் , சர்க்கரை எப்படி சேரும் என்று சந்தேகப்பட வேண்டாம். கலந்து சாப்பிட்டுப் பாருங்கள் . தயிர் சாதத்திற்கு நன்றாகவே ஜோடி சேரும். சாப்பிட்டுப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
வெங்காய மாங்காய் செய்வது எப்படி என்று பார்ப்போமா?அடுப்புத் தேவைப்படாத தயாரிப்பு.
தேவையானவை
- பொடியாக நறுக்கிய மாங்காய் சிறிது .
- ஒரு பெரிய வெங்காயம் பொடியாக.
- மஞ்சள் பொடி கால் ஸ்பூன் .
- சாம்பார்பொடி ஒரு ஸ்பூன் .
- உப்பு தேவைக்கேற்ப.
- சர்க்கரை ஒரு ஸ்பூன் .
செய்முறை:
பொடியாக நறுக்கிய வெங்காயம், மாங்காய், உப்பு, சர்க்கரை ,மஞ்சள் பொடி, சாம்பார் பொடி எல்லாவற்றையும் ஒரு கின்னத்தில் போட்டு கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து, கரண்டியால் கலந்து விடவும்.
ருசி பார்க்கவும். உங்கள் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் நீங்கள் அதிகப் படுத்திக் கொள்ளலாம். விருப்பமிருந்தால் கடுகு தாளிக்கலாம்.
மாங்காயுடன் ,வெங்காயம் , சர்க்கரை எப்படி சேரும் என்று சந்தேகப்பட வேண்டாம். கலந்து சாப்பிட்டுப் பாருங்கள் . தயிர் சாதத்திற்கு நன்றாகவே ஜோடி சேரும். சாப்பிட்டுப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
மாங்காய், வெங்காயம், உப்பு, சர்க்கரை எல்லாவற்றிலும் நீர்ச் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டாம்னு நினைக்கிறேன். மற்றபடி சாம்பார்ப் பொடிக்கு பதிலாகத் தனி மிளகாய்ப் பொடி போட்டுப் பாருங்க.
ReplyDeleteநல்ல ரெசிபி தான்.கீதா சொல்வது சரி. மிளகாய்ப் பொடி நல்ல ஆப்ஷன். நன்றி ராஜி.
ReplyDelete@கீதா மேடம்,@ரேவதி மேடம்,
ReplyDeleteமிளகாய் பொடி போட்டால் காரம் காத்து வரை வந்து விடுகிறது. அதனால் தான் சாம்பார் பொடி போடுகிறேன்.
மாங்காய் + வெங்காயம் கலந்த சாலட் நன்னா இருக்கு. பாராட்டுக்கள்.
ReplyDelete