தேவையானவை :
- புளி ஒரு பெரிய எலுமிச்சை அளவு
- பச்சை மிளகாய் ஒரு கைப்பிடியளவு. ( நான் சுமார் நூறு கிராம் எடுத்துள்ளேன்.
- உப்பு தேவைக்கேற்ப
- வெல்லம் சிறிது.
- எண்ணெய் ஒரு ஸ்பூன்
பின்பு, மிக்சியில் புளி , வதக்கின பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் போட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்கவே வேண்டாம். நன்கு அரைபடும். நன்கு அரைபட்டதும் , இந்தக் கலவையில் வெல்லத்தைப் போட்டு ஒரு சில வினாடிகள் மிக்சியை சுத்தவும். பின்பு ருசிப் பார்க்கவும். உப்பு, வெல்லம் , புளி இதில் எது வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப
இன்னும் சிறிது அதிகமாக இருக்கலாம் என்று தோன்றினால் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். கன்னாடி பாட்டிலக்ளில் வைத்துக் கொள்ளுங்கள் . தண்ணீர் சேர்க்காததானால் மாதக் கணக்கில் கெட்டுப் போகாது புளி மிளகாய் .
தயிர் சாதத்திற்கு மட்டுமல்லாமல், அரிசி உப்புமாவிற்கும் துணை போகும். தொட்டுக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள் . அருமையான சுவையோடு இருக்கும்.உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
பயங்கர காரமாக இருக்காதுங்களா...
ReplyDeleteஅதற்குத் தான் வெல்லம் போடுகிறோமே! வேண்டுமானால் வெல்லத்தை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். அப்புறம் சாப்பிட்டுப் பாருங்களேன்.
Delete" உள்ளம் கொள்ளை போகுதே " என்று சொல்வீர்கள்.
நன்றி எழில் உடனடியாக படித்து கருத்திட்டதற்கு.
இதை மிளகாய்த் தொக்குனு சொல்லுவோம். மிக்சியிலே அரைச்சுட்டு மறுபடியும் கடுகு, உ.பருப்பு , பெருங்காயம் தாளித்து வதக்குவோம். அப்போ வெல்லம் சேர்ப்போம். இம்முறையில் குறைந்தது 3 மாதங்கள் இதைக் குளிர்சாதனப் பெட்டி இல்லாமலேயே வைச்சுக்கலாம். காரமெல்லாம் புளி வைக்கிறதில் அமுங்கிப் போகும்.
ReplyDeleteஇப்போ எங்க வீட்டில் யாருக்கும் ஒத்துக்காததால் ஜாஸ்தி பண்ணுவதில்லை. தக்காளித் தொக்கு பண்ணிடுவேன். அதையும் சாதம் கலக்கலாம்.
ReplyDeleteநான் போன வாரம் தான் செய்தேன் . அதை அப்படியே பதிவிட்டு விட்டேன். இது எனக்கு மிகவும் பிடிக்கும் . நான் கடுகு தாளிப்பதில்லை. பாரம்பர்ய உணவுவகைகளை இபொழுதெல்லாம் யார் செய்கிறார்கள்? நேரமும் இல்லை அதையும் சொல்ல வேண்டுமே!
Deleteஉங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி மேடம்.
பச்சை மிளகாய் தொக்கு ! பார்க்கும்போதே எச்சில் ஊறுகிறது. காரம் விரும்புபவர்கள் யாராவது உடன் சாப்பிடுவதாக இருந்தால் செய்யலாம். விடுமுறைக்கு மகள் வந்தால் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteசெய்து , சாப்பிட்டுப் பார்த்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் சித்ரா.
Deleteபுளிமாங்காய் ஊறுகாய் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுள்ளுன்னு உரைப்பாக இருக்கும். மோர் / தயிர் சாதத்துக்கு மிகவும் ஏற்றது. பகிர்வுக்கும் பக்குவத்திற்கும் நன்றிகள்.
ReplyDelete