Saturday, June 21, 2014

மாங்காய் தொக்கு

மாங்காய் தொக்கு செய்து சாப்பிடலாம் வாங்க!
தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:


  1. பெரிய மாங்காய் 1 அல்லது 2.
  2. மிளகாய் பொடி  உங்கள் ருசிக்கேற்ப .
  3. மஞ்சள் பொடி சிறிது.
  4. பெருங்காயப்பொடி  சிறிது.
  5. உப்பு  தேவைக்கேற்ப .
  6. நல்லெண்ணெய்  இரண்டு  குழிக்கரண்டி  அளவு.
  7. கடுகு - ஒரு  டீஸ்புன் 
  8. வெந்தயம் சிறிது.

செய்முறை :

முதலில் மாங்காயை  படத்தில் உள்ளது போல் தோலை எடுத்து விட்டு,செதில் செதிலாக  செதுக்கிக் கொள்ளவும். பின்பு கடாயில் சிறிது  நல்லெண்ணெய்  விட்டு , காய்ந்தவுடன்  கடுகு போடவும். பெருங்காயப்  பொடியையும் போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் .செதுக்கி வைத்த மாங்காயை போடவும்.உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து பிரட்டி விடவும்.
 
கேஸை சிம்மில் வைத்து , ஒரு தட்டால்  மூடி வைக்கவும்.அவ்வப்பொழுது கரண்டியால் பிரட்டி விடவும். சிறிது நேரம் ஆனவுடன் மாங்காய் வெந்து ,கிளறும் போது ஒன்றாக  சேர்ந்து வரும். அப்பொழுது மிளகாய் பொடியைப் போட்டு நன்கு கிளறி விடவும். இப்பொழுது மீதி நல்லெண்ணையை  ஊற்றி இரண்டு நிமிடங்கள் கிளறி விட்டபின்  கேசை  நிறுத்தி விடலாம்.

விருப்பப்பட்டால் வெந்தயத்தை சிவக்க வறுத்துப் பொடி செய்து தூவலாம்.நல்ல வாசனையாக இருக்கும்.

ஆறின பிறகு கண்ணாடி பாட்டிலில்  போட்டு மூடி வைக்கவும்.
தயிர் சாதத்துடன்  தொட்டுக் கொள்ள, தட்டில்  தயிர் சாதம்  இருந்த தடயமே இல்லாமல் காலியாகியிருக்கும்.




செய்து பார்த்து , உங்கள் கருத்துக்களை  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.



3 comments:

  1. எங்க மாமியார் வீட்டில் இதுக்குக் கொஞ்சம் வெல்லம் போடச் சொல்லுவாங்க. இங்கே தொக்கு மாங்காய் என்றே கிடைக்கும். ரொம்பப் பெரிதாக இருக்கும். ஒரு மாங்காய் ஒன்றரை கிலோ இருக்கும். ஆகவே நான் எல்லோரும் ஒட்டு மாங்காய் என்று அழைக்கும் கல்லாமை மாங்காயிலேயே செய்துடுவேன். :))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா மேடம். நீங்கள் சொல்வது போல் ஒட்டு மாங்காயில் தான் இதை நானும் செய்வேன்.வெல்லம் நான் போடுவதில்லை.
      இந்தப் பதிவைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கொடுக்கும் "வெல்ல "டிப்சிற்கு மிக்க நன்றி மேடம்.

      Delete
  2. மாங்காய் தொக்கு படங்களும் செய்முறையும் ஜோர் ஜோர் ! பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்