சட்டென்று மாங்காய் ஊறுகாய் சாப்பிடத் தோன்றுகிறதா?
இதோ வெந்தய மாங்காய் ஊறுகாய். செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
செய்யத் தேவையானவை :
செய்முறை
மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்புன் எண்ணெய் விடவும். பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்தபின் வெந்தயம் போடவும். வெந்தயம் சட்டென்று சிவந்து விடும் . சிவந்த உடனே வறுத்த பெருங்காயத்தையும், வறுத்த வெந்தயத்தையும் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.பின்பு மிளகாயைப் போட்டு அதையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.வறுத்த எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எடுத்து வைத்திருக்கும் இருக்கும் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும், பின் நறுக்கிய மாங்காயைப் போட்டு அரைத்த பொடியைப் போட்டு சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி விடவும். பின்பு இறக்கி ஆறிய பின் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
(அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம்.மாங்காய் வேக வேண்டிய அவசியமில்லை )
உடனேயும் மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளாம். ஆனால் மறு நாள் ஊறுகாயை சுவைத்தால் நன்கு ஊறி சுவையாகக் காணப்படும்.
குறிப்பு: வெந்தயம் வறுக்கும் போது கவனம் தேவை வெந்தயம் தீய்ந்து விட்டால் ஊறுகாய் கசந்து விடும்.
அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.

- மாங்காய்
- சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப
- வெந்தயம் ஒரு டீஸ்பூன்
- பெருங்காயம் சிறிது.
- உப்பு தேவைக்கேற்ப
- கடுகு ஒரு டீஸ்பூன்
- நல்லெண்ணெய் இரண்டு குழிக்கரண்டி.
செய்முறை
மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்புன் எண்ணெய் விடவும். பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்தபின் வெந்தயம் போடவும். வெந்தயம் சட்டென்று சிவந்து விடும் . சிவந்த உடனே வறுத்த பெருங்காயத்தையும், வறுத்த வெந்தயத்தையும் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.பின்பு மிளகாயைப் போட்டு அதையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.வறுத்த எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எடுத்து வைத்திருக்கும் இருக்கும் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும், பின் நறுக்கிய மாங்காயைப் போட்டு அரைத்த பொடியைப் போட்டு சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டி விடவும். பின்பு இறக்கி ஆறிய பின் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
(அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம்.மாங்காய் வேக வேண்டிய அவசியமில்லை )
உடனேயும் மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளாம். ஆனால் மறு நாள் ஊறுகாயை சுவைத்தால் நன்கு ஊறி சுவையாகக் காணப்படும்.
குறிப்பு: வெந்தயம் வறுக்கும் போது கவனம் தேவை வெந்தயம் தீய்ந்து விட்டால் ஊறுகாய் கசந்து விடும்.
அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.
வலைச்சரத்தின் வழியாக உங்கள் அரட்டையை பார்த்தேன் அருமை.......வெந்தய மாங்காய் ஊறுகாய் SUPER...
ReplyDeleteநன்றி அனுராதா.
Deleteஅருமையான ஊறுகாய். நாக்கில் நீர் ஊற வைக்கிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள் + நன்றிகள்.
ReplyDelete