Sunday, August 10, 2014

பாகற்காய் பிரட்டல்.

பாகற்காய் என்றாலே காத தூரம்  ஓடும் குடும்பத்தினரை, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், என்று சொல்ல வைக்கும் இந்த பாகற்காய் பிரட்டல்.

பாகற்காய் பிரட்டல் செய்யத் தேவை:






  1.  பாகற்காய்-------------கால் கிலோ .
  2. புளி ----------------------எலுமிச்சை அளவு.
  3. உப்பு----------------------தேவைக்கேற்ப.
  4. மஞ்சள் தூள்-----------கால் ஸ்பூன் .
  5. சாம்பார் பொடி ------- உங்கள் ருசிக்கேற்ப 
  6. எண்ணெய் ------------2 அல்லது 3 ஸ்பூன் 
  7. சர்க்கரை----------------2 ஸ்பூன் ( டையாபிடிஸ் இருந்தால்  சர்க்கரைக்குப் பதிலாக artificial  sweetener உபயோகிக்கலாம்)
  8. கடுகு -------------------- 1 ஸ்பூன் ( விருப்பப்பட்டால்)

 செய்முறை:

முதலில் பாகற்காயை நீள வாக்கில்  அரிந்து  வைத்துக் கொள்ளவும் . பின்பு புளியை சிறிது கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில்  வாணலியை வைத்து , எண்ணெய்  ஊற்றி, காய்ந்ததும், நறுக்கி வைத்தப் பாகற்காய்களைப் போட்டு இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிரட்டிக் கொண்டிருக்கவும்.பின்பு கரைத்து வைத்தப் புளியை ஊற்றி,தேவையான உப்பு, மஞ்சள் பொடி , சாம்பார் பொடிப் போட்டு , சாரணியால் நன்கு கிளறி விட்டு
கேசை  சிம்மில் வைத்து, ஒரு தட்டால் மூடி விடவும்.

அவ்வப்பொழுது கரண்டியால் பிரட்டி விடவும். நன்கு வெந்ததும், மூடியை எடுத்து விடவும்..அதிலிருக்கும் தண்ணீர் எல்லாம் சுண்டும் வரை  கிளறிக் கொண்டே இருக்கவும்.சுவைப் பார்க்கவும் எது தேவையோ அதை சிறிது சேர்க்கலாம். தேவையானால் சிறிது எண்ணெய்  ஊற்றிப் பிரட்டி விடவும்.நன்கு சுருண்டு வரும் போது , சர்க்கரைத் தூவி  அடுப்பை சிம்மில் வைத்து  இரண்டு நிமிடம் பிரட்டவும். சுவைப் பார்க்கவும். உங்கள் ருசிக்கேற்ப வேண்டுமானால் சர்க்கரை சிறிது சேர்த்துக் கொள்ளலாம். பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாதத்தோடு  பரிமாறவும்.


                                              


சாதத்தில் போட்டுப் பிசைந்து கொண்டும் சாப்பிடலாம். தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள புளிப்பு, உறைப்பு, உப்பு, இனிப்பு சேர்ந்து ...........ஆஹா.....தேவாமிர்தமாகும்  தயிர் சாதம்.

4 comments:

  1. பாகற்காய் பிரட்டல் சமையல் குறிப்பு என் நாவில் நீர் சுரக்க வைத்துவிட்டது. பாகற்காய் எனக்கு மிக மிக பிடித்தமான காய். என் கணவருக்கும் மிகவும் பிடித்தமானதாகும். என் செய்முறையும் இதேதான். ஆனால் நான் புளி தண்ணீர் சேர்க்க மாட்டேன். இந்த கறியின் சுவையை என்னால் உணர முடிகிறது!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா உங்கள் கருத்துக்கு . புளி சேர்த்து செய்து பார்த்து சொல்லுங்கள்.

      Delete
  2. பாகற்காய் பிரட்டல் ........ செய்முறை குறிப்புகள் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோபு சார் உங்கள் கருத்துக்கு

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்