Monday, May 22, 2017

சமையல் டிப்ஸ் !

குக்கர் அடுப்பில்  சீறி க் கொண்டிருக்க, உங்கள் கையில்  வெங்காயம்  வெட்டுப்பட, கண்களிலோ  கண்ணீர் ( வெங்காயத்தால்). 

அப்போது உங்களவர் ," என் போனைப் பார்த்தாயா ?" கேட்க,

உங்கள் மகனோ , மகளோ, " அம்மா என் யூனிபார்ம் காணோம்." என்று அபயக் குரல் கொடுக்க .... எல்லாவற்றையும் சரி செய்து விட்டு,

" இதோ புளியைக் கரைத்து சாம்பார்  செய்து விட்டால்  ஆச்சு என்று சமையலறைக்குள் நுழைந்து ,"புளியை  ஊற வைத்த கிண்ணம் எங்கே என்று தேடிய பின் தான் உங்கள் நினைவிற்கு வருகிறது ," இன்னும் புளியை  நனைத்தே  வைக்க வில்லையா?".

"இன்றைக்கு நேரத்திற்கு  எல்லாம் முடித்தாற்  போல் தான்." அங்கலாய்த்துக் கொண்டு , புளியுடன் யுத்தத்தை ஆரம்பிக்கப் போகிறீர்களா?

அப்படிப்பட்ட யுத்தம் தவிர்க்கும் முயற்சி தான்  இந்த வீடியோ :



யுத்தம் தவிர்க்கும் டிப்ஸ்  வீடியோவை, 'Like', 'Share' & 'Subscribe' செய்து விடுங்களேன்.

நன்றி.




3 comments:

  1. //,"புளியை ஊற வைத்த கிண்ணம் எங்கே என்று தேடிய பின் தான் உங்கள் நினைவிற்கு வருகிறது ," இன்னும் புளியை நனைத்தே வைக்க வில்லையா?".//

    இந்த இடத்தைப்படித்ததும் எனக்கே என் வயிற்றில் புளி கரைத்தது போல மிகவும் டென்ஷன் ஆகிவிட்டது.

    யுத்தம் தவிர்க்கக் கொடுத்துள்ள டிப்ஸ் மிகவும் பயனுள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  2. புளியைக் கரைப்பதும் ஒரு கலைதான்

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்