Showing posts with label பூண்டு. Show all posts
Showing posts with label பூண்டு. Show all posts

Thursday, October 26, 2017

கொத்தமல்லி சாதம் !

கொத்தமல்லி சாதம் சுவையானது மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் ஏற்றது.  கொத்தமல்லி சாதத்திலேயே காய்கறிகளும் சேர்த்து செய்தால், எல்லோருக்குமே மதிய உணவாக கொடுத்து விடலாமே. அதுவும் பள்ளிக் குழந்தைகளின்' லஞ்ச்பாக்ஸ் ' ற்கு மிகவும் ஏற்றது. 


எப்படி செய்யலாம் என்று இந்த வீடியோ சொல்கிறது......





                                                   நன்றி! நன்றி! நன்றி !

Monday, April 17, 2017

பருப்புத் துவையலுக்கு எது இணை?

உலகம் சுற்றும் வாலிபனான  என் மகன் எப்பொழுது தரையிறங்கினாலும், அவன்  விருபப்பட்டுக் கேட்பது பருப்புத் துவையலும், வத்தக் குழம்பும் தான்.     
'' உலகில்  பல இடங்களில் சாப்பிட்டிருக்கிறேன்.என்ன தான் வெண்ணெயும், க்ரீமுமே கொட்டி கொட்டி செய்தாலும்,  அவையெல்லாம் நம்   பருப்புதுவையலிற்கும், வத்தக் குழம்பிற்கும் ஈடாகுமா ?" என்று அங்கலாய்ப்பான்.

உங்களுக்கும் 'பருப்புத்துவையல்,வத்தக்குழம்பு 'ஜோடியைப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.

நான் செய்யும் வத்தக்குழம்பு செய்முறை பார்க்க  இங்கே ' க்ளிக்' செய்யவும் .

பருப்புத் துவையல் எப்படி செய்வது என்று கீழிருக்கும்  வீடியோவில் சொல்கிறேன்.



           உங்களின் மேலான கருத்துக்கள் என்னை மேம்படுத்த உதவும்.
                                                           நன்றி! நன்றி!


Saturday, April 8, 2017

பூண்டு பொடி

உங்கள் இதயத்திற்கு  இதமான பொடி வகை ஒன்றை இங்கே பகிர்கிறேன்.
நான் இங்கே சொல்லப் போவது பூண்டுப் பொடி.


எப்படி செய்ய வேண்டுமென்பதை  நான் சொல்வதை விட வீடியோவைப் பார்த்தால் நன்கு விளங்கும்.

 

  

நீங்களும் செய்து பாருங்கள்..
சாதத்தோடு பூண்டுப் பொடி பரிமாறிப்  பாருங்கள்  அலாதியான ருசியுடன் , உங்கள் அன்புக்குரியவர்களின்  இதயத்தையும்  ஆரோக்கியமாகப் பாதுகாத்துக் கொடுக்கும். நீங்களும் சாப்பிட மறக்க வேண்டாம். உங்கள் இதயமும் பலப்படட்டும் .


Saturday, March 26, 2016

பூண்டு வெங்காயச் சட்னி

பூண்டு வெங்காயச் சட்னி,  தோசைக்கு, இட்லிக்கு  ஏன் சப்பாத்திக்குக் கூட  தொட்டுக் கொள்ளலாம்.

எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?

பூண்டுவெங்காயச்  சட்னி செய்யத் தேவையானவை:



  1.  பூண்டு-- 5/6  பற்கள் 
  2. சாம்பார் வெங்காயம் ---5 அல்லது  6.
  3. ( சாம்பார் வெங்காயம் இல்லையெனில்  பெரிய வெங்காயம் ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.)
  4. சிவப்பு மிளகாய்--5 அல்லது 6
  5.  தக்காளிப் பழம்--- 2.
  6.  உப்பு--- தேவைக்கேற்ப 
  7. எண்ணெய்--1 ஸ்புன்.
  8.  கடுகு ---1/2 ஸ்பூன்  

 சட்னி செய்முறை :

பூண்டு , வெங்காயம்  உரித்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயமாயிருந்தால்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியையும்  நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் , வாணலியில்  எண்ணெய்  ஊற்றி , சூடான பின், முதலில் சிவப்பு மிளகாயைப் போட்டு  வறுத்து எடுத்து வைத்துக்  கொள்ளவும். பிறகு பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டு  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (நன்கு வதக்கி விட வேண்டாம். சுவை மாறி விடும்.)

பிறகு வறுத்த மிளகாயை , உப்புடன் சேர்த்து  மிக்சியில் போட்டு நன்கு  பொடியாக்கிக் கொள்ளவும். அதற்குப் பிறகு வதக்கின பூண்டு, வெங்காயம், தக்காளியைப் போட்டு  அரைக்கவும். (நான் மிகவும் நைசாக அரைப்பதில்லை).

கடுகு தாளிக்கவும்.



பூண்டு, வெங்காயம், சட்னி ரெடி.

வதக்கின தக்காளிக்குப்  பதிலாக புளியை அப்படியே  உபயோகிக்கலாம்.

சட்னியைப் பரிமாறும் போது எல்லையற்ற அன்புடன் பரிமாறுங்கள். உங்களவர்  உங்களை வானளாவப் புகழ்ந்துத் தள்ளி விடுவார் .

சட்னியின் மகிமை எப்படியிருந்தது என்பதை எனக்கு சொல்ல மறக்க வேண்டாம்.