Saturday, April 8, 2017

பூண்டு பொடி

உங்கள் இதயத்திற்கு  இதமான பொடி வகை ஒன்றை இங்கே பகிர்கிறேன்.
நான் இங்கே சொல்லப் போவது பூண்டுப் பொடி.


எப்படி செய்ய வேண்டுமென்பதை  நான் சொல்வதை விட வீடியோவைப் பார்த்தால் நன்கு விளங்கும்.

 

  

நீங்களும் செய்து பாருங்கள்..
சாதத்தோடு பூண்டுப் பொடி பரிமாறிப்  பாருங்கள்  அலாதியான ருசியுடன் , உங்கள் அன்புக்குரியவர்களின்  இதயத்தையும்  ஆரோக்கியமாகப் பாதுகாத்துக் கொடுக்கும். நீங்களும் சாப்பிட மறக்க வேண்டாம். உங்கள் இதயமும் பலப்படட்டும் .


9 comments:

  1. படித்தவுடனேயே இதயம் பலப்பட்டு விட்டது போன்றதோர் பிரமை ஏற்பட்டது. ஆரோக்யமான பதிவு ஒன்றை அழகான படங்களுடன் + செய்முறைகளுடன் கொடுத்துள்ளது அழகு. பாராட்டுகள் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உடனடி பாராட்டிற்கு மிக்க நன்றி கோபு சார். வீடியோ பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவித்தால், வீடியோவை இன்னும் செம்மைப்படுத்த எனக்கு உதவியாக இருக்கும்.

      இன்னும் ஒரு வேண்டுகோள். வீடியோவில் 'Subscribe' என்றொரு பட்டன் இருக்கும். (உங்களுக்குத் தொந்தரவாக இல்லையென்றால்) அதை ஒரு க்ளிக் செய்து விடுங்கள். நன்றி சார்.

      உங்களுடைய இந்த கருத்துரையை வீடியோவின் கீழே உள்ள கருத்துரைப் பெட்டியில் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு ஆட்செபனையிருக்காது என்று நினைக்கிறேன். நன்றி.

      Delete
    2. //வீடியோவில் 'Subscribe' என்றொரு பட்டன் இருக்கும். (உங்களுக்குத் தொந்தரவாக இல்லையென்றால்) அதை ஒரு க்ளிக் செய்து விடுங்கள்//

      இப்போது தான் Subscribe பட்டனை க்ளிக் செய்துள்ளேன்.

      //உங்களுடைய இந்த கருத்துரையை வீடியோவின் கீழே உள்ள கருத்துரைப் பெட்டியில் பகிர்ந்து கொள்கிறேன்.//

      உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் தாராளமாக
      பகிர்ந்து கொள்ளவும். :)

      Delete
  2. சுலபமா பண்ணறதுக்கு சொல்லியிருக்காங்க. இதை முயற்சி பண்ணப்போறேன் இந்த வாரத்துல.

    3 மிளகாய்னு செய்முறைல இருக்கு. ஆனால் வீடியோல 1 மிளகாய்தான் உபயோகப்படுத்தியிருக்காங்க.

    ஈர்ச்சிப்போயிடாதா? (வதக்குன பூண்டினால).

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி சார். 1அல்லது 2 என்று திருத்தி விட்டேன் .


      //ஈர்ச்சிப்போயிடாதா? (வதக்குன பூண்டினால)//
      ஒரு சில வினாடிகள் தான் அடுப்பில் இருக்க வேண்டும். அதுவும் பூண்டின் பச்சை வாசனை போவதற்காகத் தான். அதனால் நன்றாகவே வரும்.
      செய்து பாரத்து எப்படி வந்தது என்று சொல்லுங்கள்.

      ஆர்வமாய் பார்த்து, உங்கள் சந்தேகத்தைக் கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது சார்.

      என் 'youtube' வீடியோவிற்கு 'subscribe' செய்யுங்களேன். உங்களைப் போன்றவர்களின் கருத்துரைகளால் வீடியோவை நான் இன்னும் செம்மையாக்கிக் கொள்ள முடியும்.
      நன்றி ! நன்றி!

      Delete
  3. எங்க வீட்டுக்காரம்மா ஆர்வமா பார்த்தார்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வீட்டுக்காரம்மா ஆர்வமா பார்த்தது பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு நன்றியும், மகிழ்ச்சியும். அவர்களை ' subscribe' மற்றும் 'like' பட்டன்களை க்ளிக் செய்து விட சொல்லுங்கள். அப்பொழுது இது போன்ற நிறைய வீடியோக்கள் அவர்கள் பார்வைக்கு(மெயிலிற்கு) வரும். நன்றி அசோகன் சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்