Thursday, January 2, 2014

வெங்காயப் பொடி.

















வெங்காயப்  பொடி செய்வதற்குத் தேவையானவை

1. சின்ன வெங்காயம்  ஒரு கைப்பிடி.

2. துவரம்பருப்பு  ஒரு  ஆழாக்கு .(வெங்காயத்தை விடவும், பருப்பின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் பொடி நன்றாக இருக்கும் .)

3. சிவப்பு  மிளகாய்  உங்கள் ருசிக்கேற்ப.

4. பெருங்காயம் சிறிது.

உப்பு தேவைக்கேற்ப
ஒரு ஸ்பூன்  எண்ணெய் .

வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.பருப்பு, மிளகாய், பெருங்காயம் எல்லாவற்றையும் சூடான  எண்ணெயில்  வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை லேசாக  வதக்கவும். இரண்டு  நிமிடங்கள் வதக்கினால் போதும் . ரொம்பவும்  வெங்காயம் வதங்கி விட்டால் , வெங்காயப் பொடி ,பொடியாக இல்லாமல் , துவையலைப் போல் ஆகிவிடும். அது மட்டுமல்லாமல்  ருசியும் மாறிவிடக்கூடும் .

மிக்சியில் முதலில், பெருங்காயம், பருப்பு, மிளகாய்,உப்பு எல்லாவற்றையும் போட்டு , நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். பின்பு (லேசாக ) வதக்கின வெங்காயத்தைப் போட்டு  நாற்பது அல்லது நாற்பத்திஐந்து செகண்ட்ஸ்  மட்டுமே   சுற்றவும்.  (ரொம்ப நேரம்  மிக்சியில் வெங்காயம் போட்டு  சுற்றினால் ,மீண்டும் சொல்கிறேன், வெங்காயம்  துவையலாகி விடும் அபாயம்  உண்டு.)



பின் தட்டில் கொட்டி கைகளால் லேசாக உதிர்த்துக் கொள்ளவும்.

கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். பல  நாட்கள் நன்றாகவே இருக்கும்.
ஃ பிரிட்ஜில் வைத்தும்  சாப்பிடலாம். வேண்டும் போது சூடான சாதத்தில், சிறிது நல்லெண்ணெய் விட்டு ,வெங்காயப் பொடிபோட்டு பிசைந்து  சாப்பிடுங்கள் .
ஒரு பிடி  அதிகமாகவே சாப்பிட்டு விடுவீர்கள்  பாருங்களேன் !
உங்களுக்குப் பிடித்திருந்தால் சொல்லுங்களேன்!

6 comments:

  1. வெங்காயப் பொடியை இப்போதான் கேள்விப்படுகிறேன். வித்தியாசமா இருக்கு. செய்து பார்க்கிறேன், இதுமாதிரி நிறைய குடுங்க.

    எலுமிச்சையை உப்பு போட்டு ஊற‌வச்சிருக்கேன். இன்னும் இரண்டு நாள் கழித்துதான் காரம் சேர்க்க வேண்டும். நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா. செய்து சாப்பிட்டுப் பாருங்கள். அசத்தலாக இருக்கும். ஊறுகாய் எப்படி வந்தது என்பதை பிறகு சொல்லுங்கள்.
      நன்றி.

      Delete
  2. Tried it today. Came out excellent. You had spelled it out in fine details. Thanks a ton. One of a kind. Very authentic recipe.

    ReplyDelete
  3. Great recipe. Came out excellent. You have walked thro the process in great details. Authentic recipe. Thanks a lot.

    ReplyDelete
    Replies
    1. First let me thankyou for posting your comment here. Happy that podi came out well.
      Don't hesitate to ask any other recipe. I shall post it of course with amma's assistance.
      Thankyou.

      Delete
  4. புதியதானதொரு ரெசிபி!
    வாசிக்கும் போதே நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை..
    செய்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன்!!

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்