Tuesday, January 21, 2014

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஜுஸ், ரசம்  என்பது நாம் சாதரணமாக  செய்வது. தக்காளி சீசனில் கிடைக்கும் போது  வாங்கி ஊறுகாய் செய்து வைக்கலாம். அதிக நாட்கள் இருக்கும்.




தக்காளி ஊறுகாய்  செய்யத் தேவையானவை.:

தக்காளி  பெரிதாக 4 அல்லது 5.
(கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும். ரொம்பவும் பழுத்ததாக இருந்தால் ஊறுகாய் அவ்வளவு நன்றாக இருக்காது.) 

புளி  ஒரு உருண்டை.
உப்பு  ருசிக்கேற்ப.
மிளகாய் தூள்  இரண்டு சின்ன கிண்ணம்.
நல்லெண்ணெய்   5 டீஸ்பூன் 
கடுகு   2 டீஸ்பூன் .
கடலைபருப்பு  2 டீஸ்பூன் .

செய்முறை:

தக்காளியை நன்கு அலம்பி ,பின் நன்றாகத் துடைத்து  சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.கோது நீக்கிய, புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதன் மேல் இந்த நறுக்கிய தக்காளியைப் போட்டு மூடி வைக்கவும். படத்தில்  காட்டியது போல் நறுக்கிய தக்காளிகளை வைக்கவும். அப்பொழுது தான்  தக்காளி சாற்றில் புளி  ஊறும்.ஒரு மணி நேரத்திற்கு ஊறட்டும்.








உப்பு  படத்தில் காட்டியுள்ள  அளவு. 
ஒரு கைப்பிடியளவு போட்டிருக்கிறேன்.



மிளகாய் பொடி  படத்தில் இருக்கும் கிண்ணத்தில்  இரண்டு கிண்ணம்எடுத்துக் கொண்டேன். நீங்கள் உங்கள் ருசிக்கேற்ப  எடுத்துக் கொள்ளலாம்.                                                                



 ஒரு மணி நேரம் ஊறட்டும். பின்பு , தக்காளி, புளி  ,உப்பு எல்லாவற்றையும்  மிக்சியில் போட்டு  நன்றாக அரைக்கவும். நன்கு நைசாக இருக்கட்டும். கண்டிப்பாக  தண்ணீர் சேர்க்காமல் தான் அரைக்க வேண்டும்.
 நன்றாகவே அரைபடும்.

விழுதாக வருவதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு மிளகாய் பொடியைப் போட்டு கரண்டியால் நன்கு கிளறவும்.

ருசி பார்க்கவும். உப்பு , மிளகாய் பொடி, புளி  இதில் .எது இன்னும் கொஞ்சம் போட்டால் ருசி  நன்றாக  இருக்கும்  என்று  உங்களுக்குத்  தோன்றுகிறதோ  ,
திரும்பவும் கொஞ்சம் சேர்த்து  போட்டு மிக்சியில்  அரைக்கலாம். 

அடுப்பில் வாணலியை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றவும்.எண்ணெய்  சூடானதும், கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்  பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அரைத்த விழுதை  சேர்க்கவும். அடுப்பை  சிம்மில் வைத்து இரண்டு, மூன்று  நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு  அடுப்பை நிறுத்தி விடவும். 




தக்காளி ஊறுகாய்  ரெடி.

கூடுதல் சுவைக்கு:  முருங்கைக்காயை சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கி , அப்படியே பச்சையாக , தக்காளி ஊறுகாயில்(அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு) போட்டு  விடவும். கரண்டியால் கலக்கவும். தக்காளி ஊறுகாய் சுவை + முருங்கைக்காயின் ருசி அபாரமாக இருக்கும்.

ஆறிய பின் ஊறுகாயை  கண்ணாடி பாட்டிலில்  வைக்கவும்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். சப்பாத்திக்குக் கூட  நன்றாக இருக்கும். 

ஊறுகாயை  கண்ணாடி பாட்டிலிலேயே  வைக்கவும். 
பிளாஸ்டிக்  பாட்டில்  உபயோகிக்க  வேண்டாமே . ! ப்ளீஸ் .......

2 comments:

  1. இந்த செய்முறையும் வித்தியாசமாக‌த்தான் இருக்கிறது. அதிலும் கடலைப்பருப்பையும், முருங்கைக்காயையும் சேர்ப்பது இன்னும் வித்தியாசமா இருக்கு. ஃப்ரெஷ் முருங்கைக்காய் கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,
      நான் ஊரிலில்லை . திருமணம் ஒன்றிற்காக வெளியூர் சென்றிருந்தேன். அதனால் தான் உங்களுக்குப் பதில் எழுதத் தாமதம்.

      முருங்கைக்காய் நாள்பட, நாள்பட , நன்றாக ஊறி சாபிடவும் சுவையாக இருக்கும். ஊறுகாயும் நல்ல வாசனையுடன் இருக்கும். கடலைப் பருப்பும் நன்றாக ஊறி சாப்பிடும் போது சுவை கூடுவது உறுதி.
      செய்து பார்த்து சொல்லுங்கள்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்