உப்புமா, பொங்கல், சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற பல டிபன் வகைகளுக்கு நன்றாகவே துணை போகும் தேங்காய் துவையல் . அதன் செய்முறையை பார்ப்போம்.
இதற்குத் தேவையானவை :
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பின், பெருங்காயம் போட்டு பொரிய வைக்கவும். பின்பு மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்சியில் முதலில், வறுத்த பெருங்காயம்,மிளகாய், உளுத்தம் பருப்பு , உப்பு போட்டு பொடி செய்யவும். நன்கு நைசாக அரை பட்டவுடன், தேங்காய் துருவல், புளி சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். நன்கு அரை பட்டவுடன். எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ளவும், சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
செய்முறை விளக்கம் இதோ :
பி.கு.தண்ணீர் சேர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால் துவையல் சட்னியாக மாறும் அபாயம் உண்டு.
இதற்குத் தேவையானவை :
- ஒரு மூடி தேங்காய் துருவல் .
- உளுத்தம்பருப்பு 3 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய், இரண்டு அல்லது மூன்று ( உங்கள் ருசிக்கேற்ப)
- புளி சின்ன எலுமிச்சை அளவு
- உப்பு ருசிக்கேற்ப
- பெருங்காயம் சிறிது
- எண்ணெய் ஒரு ஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பின், பெருங்காயம் போட்டு பொரிய வைக்கவும். பின்பு மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்சியில் முதலில், வறுத்த பெருங்காயம்,மிளகாய், உளுத்தம் பருப்பு , உப்பு போட்டு பொடி செய்யவும். நன்கு நைசாக அரை பட்டவுடன், தேங்காய் துருவல், புளி சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். நன்கு அரை பட்டவுடன். எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ளவும், சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
செய்முறை விளக்கம் இதோ :
அருமையான துவையல்..
ReplyDeleteபச்சையாகவே தேங்காய்துருவல், பச்சைமிளகாய், புளி,
உப்பு வைத்து அரைத்து செய்வதுண்டு.
இந்த செய்முறை முயற்சித்துப் பாருங்கள். நன்றி உங்கள் கருத்துக்கு மேடம்.
DeleteTHANK U
ReplyDeleteநன்றி.
Deleteஎனக்கு மிகவும் பிடித்தமான துவையல். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி சார்.
Delete