குதிரைவாலி அரிசி ஒரு வகை சிறு தானியம். நம் அரிசியில் பொங்கல், உப்புமா செய்வது போல் , குதிரைவாலி பொங்கல் செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. புரதம், நார் சத்து, விட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.குதிரைவாலிப் பொங்கல் செய்முறை பார்ப்போமா?
தேவையானவை :
செய்முறை:
பாசிபருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குதிரைவாலி அரிசியைக் களைந்து, வறுத்த பாசிபருப்புடன் கலந்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வைத்து , பின்பு கேசை நிறுத்தி விடவும்.
குக்கர் நன்கு ஆறியவுடன், திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி பருப்பு இரண்டையும் கரண்டியால் லேசாக மசிக்கவும். கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி உங்களுக்கு வேண்டுமளவிற்குத் தளர்த்திக் கொள்ளலாம். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்..பின்பு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விடவும், சூடானதும் , மிளகு, சீரகம், முந்திரி போட்டு சிவக்க வறுக்கவும். சிவந்ததும், இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து பொங்கலில் போடவும். மிகவும் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
தேங்காய் சட்னியுடன் பொங்கலை சூடாகப் சாப்பிடவும்.
பி.கு. : குதிரைவாலி அரிசி வெந்ததும் அளவில் நிறைய ஆகிவிடும்.அதனால்
முதல் முறை செய்யும் போது சற்று கவனமாக அளவைக் குறைத்துப் போட்டுக் கொள்ளவும். அதே போல் கொஞ்சம் சாப்பிட்டாலே திருப்தியாக இருக்கும் . வெகு நேரத்திற்கு பசியெடுக்காது. .
தேவையானவை :
- குதிரைவாலி அரிசி -- 1 கப்
- பாசி பருப்பு -----1/4 கப்
- மிளகு ஒரு ஸ்புன்
- சீரகம் ஒரு ஸ்பூன்
- முந்திரி சிறிது.
- நெய் இரண்டு ஸ்பூன்
- இஞ்சி ஒரு சிறிய துண்டு ( நறுக்கியது )
- கறிவேப்பிலை சிறிது.
- உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை:
பாசிபருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குதிரைவாலி அரிசியைக் களைந்து, வறுத்த பாசிபருப்புடன் கலந்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வைத்து , பின்பு கேசை நிறுத்தி விடவும்.
குக்கர் நன்கு ஆறியவுடன், திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி பருப்பு இரண்டையும் கரண்டியால் லேசாக மசிக்கவும். கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி உங்களுக்கு வேண்டுமளவிற்குத் தளர்த்திக் கொள்ளலாம். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்..பின்பு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விடவும், சூடானதும் , மிளகு, சீரகம், முந்திரி போட்டு சிவக்க வறுக்கவும். சிவந்ததும், இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து பொங்கலில் போடவும். மிகவும் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
தேங்காய் சட்னியுடன் பொங்கலை சூடாகப் சாப்பிடவும்.
பி.கு. : குதிரைவாலி அரிசி வெந்ததும் அளவில் நிறைய ஆகிவிடும்.அதனால்
முதல் முறை செய்யும் போது சற்று கவனமாக அளவைக் குறைத்துப் போட்டுக் கொள்ளவும். அதே போல் கொஞ்சம் சாப்பிட்டாலே திருப்தியாக இருக்கும் . வெகு நேரத்திற்கு பசியெடுக்காது. .
அருமையான பொங்கல்.
ReplyDeleteஆரோக்கிய உணவு
ReplyDeleteஆரோக்கிய உணவு
ReplyDelete