Tuesday, August 19, 2014

வரகரிசி உப்புமா..

சிறு தானியங்களில்  இருக்கும்  ஊட்ட சத்துக்கள்  பற்றி  மிகவும் பரவலாக  இப்பொழுது பேசப்படுகின்றன.
புரத சத்தும், நார் சத்தும்  மிகுந்து காணப்படும் வரகரிசி (Kodo Millet) உப்புமா  செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது.  அதன்  செய்முறையை  இங்கே பகிர்கிறேன்.





வரகரிசி உப்புமா செய்யத் தேவையானவை:

  1. வரகரிசி------1 கப்.
  2. அரிந்த  வெங்காயம் ----சிறிது
  3. நறுக்கிய பச்சை மிளகாய்(1)  அல்லது கிள்ளிய  சிவப்பு மிளகாய் (1)
  4. கடுகு  ---1 ஸ்புன் 
  5. உளுத்தப்பருப்பு-----1 ஸ்பூன் 
  6. பெருங்காயம் --சிறிது.
  7. உப்பு ----ருசிக்கேற்ப.
  8. தாளிக்க  எண்ணெய் --1 ஸ்பூன்.
  9. கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி,  சூடானதும் , பெருங்காயம் போட பொரிந்து வரும். பிறகு கடுகு  போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அது சிவக்கும் போது , வெங்காயம் பச்சை மிளகாய் , கறிவேப்பிலை  சேர்த்து வதக்கவும், வதங்கியதும், இரண்டரை கப்  தண்ணீர்  உற்றவும். தேவையான உப்பு சேர்க்கவும்.( 1கப்  வரகரிசிக்கு சுமார் இரண்டரை கப்  தண்ணீர் )

தண்ணீர  கொதிக்க  ஆரம்பித்ததும்,  வரகரிசியைப் போட்டு  கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு தட்டுப் போட்டு மூடி  விடவும். வரகரிசி வேக, சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆகும். வெந்த பிறகு நன்கு உதிரிஉதிரியாக வரும். இப்பொழுது கேசை நிறுத்தி  விடலாம்.





சூடு  ஆறுவதற்கு முன்பாக பரிமாறவும். இதனுடன் புளிமிளகாய்  தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும்  சுவையாக இருந்தது.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

 

4 comments:

  1. இது பாயசத்துக்கு போடும் ஜவ்வரிசி மாதிரியே இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. படத்தில் உள்ளது ஜவ்வரிசி இல்லை. உங்கள் பதிவு ஒன்றில் நீங்கள் சொல்லியது போல் ஜவ்வரிசி உடலுக்குக் கெடுதி. அதை சாப்பிடுவது நம் உடல் நலத்தைக் கெடுத்து விடும்.
      இது வரகரிசி.
      உடல் நலத்திற்கு நண்மை செய்யும்.

      Delete
  2. இதுவரை இதை வாங்கியதோ சாப்பிட்டதோ இல்லை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது தானே இதைப்பற்றி சொல்கிறார்கள்.உடலுக்கு நல்லது என்று சொல்கிறார்களே. அதனால் தான் செய்கிறேன்.
      நன்றி உங்கள் கருத்துக்கு சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்