Friday, April 28, 2017

கொத்தமல்லி துவையல்/ சட்னி

அன்று தோழி கமலி என் வீட்டிற்கு விஜயம்.

" அட.... கமலியா ....வா வா...."  நான் வரவேற்றேன்.

அவளுக்கு ஜில்லென்று  எலுமிச்சை ஜூஸ் கொடுத்து விட்டு பேச உட்கார்ந்ததில் நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.

இவளுக்கு சாப்பிட ஒன்றும் கொடுக்கவில்லையே என்று நினைவு வர.........அவளுக்குத் தோசை வார்த்துக் கொடுத்தேன். அதற்கு ஜோடியாக  கொத்தமல்லி சட்னி  வைத்து சாப்பிட சொன்னேன்.

" அட.... ராஜி.... இந்த கொத்தமல்லை சட்னி  படு ஜோர்.  வித்தியாசமாய் இருக்கிறதே. அபார ருசி "  நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் .

நானோ பெருமையாய் ,"வெங்காயம் சேர்த்து  அரைத்தேன் கமலி." என்றேன்.

"வெங்காயமா... கொத்தமல்லியுடனா ?  அப்புறம்......? " இழுத்தாள் கமலி.

"அப்புறம்........ விழுப்புரம் " நான் நக்கலடித்து விட்டு ,

" இந்த வீடியோவைப் பார்த்துக் கொள்."  என்று  என் ஃபோனை அவளிடம் நகர்த்தினேன்..

நீங்களும் தான் பாருங்களேன். சட்டென்று செய்து விடலாம். ருசியோ அபாரம்.



      'Share', 'Like' & 'Subscribe' செய்ய  மறக்க வேண்டாமே  ப்ளீஸ் ....
                                                    நன்றி! நன்றி!

2 comments:

  1. கொத்தமல்லி + வெங்காயச் சட்னி செய்முறை காணொளி சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் உடனடி வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்