Wednesday, May 10, 2017

இட்லி மிளகாய் பொடி !

இட்லி தோசையா? எங்களுக்கு சாம்பார், சட்னி தான் வேண்டும் என்று சொல்லும் ரசிகர்கள்  இருக்கிறார்கள்.  வேறு சிலர் சாம்பாரோ, சட்னியோ, அதனுடன் எங்களுக்கு  நல்லெண்ணெயில் குழைத்த  மிளகாய்ப் பொடி அவசியம் வேண்டும்  என்று சொல்லும் மிளகாய்ப் பொடி ரசிகர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

இல்லத்தரசிகளுக்கோ  இட்லி மிளகாய்ப்  பொடி  வiரப் பிரசாதம் என்று சொல்லலாம்.  சட்னி, சாம்பார் செய்ய முடியவில்லையா ?  மிளகாய்ப் பொடி கைவசம் இருந்தால் கவலையே வேண்டாம்.
 ஆனால், மிளகாய்ப் பொடி செய்முறையில் சில நுணுக்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
அதனால், இட்லி மிளகாய்ப் பொடி செய்யும் போது  படம் பிடித்து விட்டேன். படம் எப்படி இருக்கிறது என்று பார்த்து உங்கள் மேலானக் கருத்துகளை சொல்லுங்களேன்.


உங்கள் நண்பர்களிடம் இந்த  You Tube வீடியோவை 'Share' செய்து விடுங்கள்.  வீடியோவிற்குக் கீழே உள்ள 'Like'  மற்றும் 'Subscribe' பட்டன்களை ஓங்கி  ஒரு அடி அடித்து விட்டு,  நகருங்கள்.

8 comments:

  1. நாங்கள் கடலைப்பருப்பும் சேர்ப்போம். பெருங்காயமும் வறுத்துக் கொள்வோம். புதிய முயற்சிக்கு (வீடியோ) வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ஸ்ரீராம் சார். என்னுடைய மற்ற வீடியோக்களைம் இத்தளத்தில் பதிவாக்கியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது, பார்த்து உங்கள் மேலானக் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களுக்கு பதிவு பிடித்திருந்தால் , நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே , உங்கள் 'திங்கக் கிழமை' பதிவில் இணைத்துக் கொள்ளலாம். என்னிடம் கேட்கவேண்டிய அவசியமில்லை. எனக்குத் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். அதுவும் என் வீடியோவிற்கு வரவேற்பு எப்படி என்று தெரிந்து கொள்ள விருப்பம்.

      Delete
  2. my wife uses half broken ulundu with black skin, which gives slightly dark colour and relatively more nutritious also. oil is added slightly for roasting chilly only. the idea is using more raw nallennai during eating only.

    ReplyDelete
    Replies
    1. Let me thankyou for your first visit to my blog and commenting on it.

      Yes Swamy sir. The black urad dal is more nutritious . Very soon I shall post the video of the black Urad dal podi. Thankyou for the extra information about nallennai, which I failed to mention in my video. Your comments makes my blog more informative. Thankyou again.

      Delete
  3. வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !!

    http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html

    நான் மேற்படி பதிவினில் படங்களுடன் பக்கம் பக்கமாக எழுதியுள்ளவற்றை தாங்கள் மிக அழகாக, மிகச்சிறிய காணொளியாகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    மேலும் தங்களின் சமையல் அறையும், கேஸ் அடுப்பும், எரியும் பர்னரும், கிடுக்கி, இலுப்பச்சட்டி, கிண்ணங்கள், பாத்திரங்கள் என அனைத்துமே சுத்தமோ சுத்தம் .... படு சுத்தம்.

    செய்முறைகள் யாவும் அருமையோ அருமை. பளிச்.....பளிச்.

    பாராட்டுகள்.

    அஞ்சறைப் பெட்டி வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தவறாத வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி கோபு சார். உங்கள் பாராட்டு என் சமையலறயிலும் பாத்திரங்களிலும் உள்ள 'பளிச்'சைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு பூஸ்ட். அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள் சார்.

      Delete
  4. அமெரிக்காவில் என் பேரனுக்கு (வயது 5) எள்ளு மிளகாய்ப் பொடி தான் பிடிக்கும்...

    இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்