Friday, May 12, 2017

உப்புமா கொழுக்கட்டை!

" இன்று மாலை நேர சிற்றுண்டிக்கு  உப்புமா கொழுக்கட்டை  செய்யட்டுமா? " இது நான்.

"உப்புமாவா ? கொழுக்கட்டையா? " என்னவர் மறு கேள்வி கேட்டார்.

"உப்புமா கொழுக்கட்டை நான் செய்ததே இல்லை ? நீங்களும் சாப்பிட்டதேயில்லை . அப்படித்தானே? " யுத்தத்திற்கு ஆயத்தமானேன்.

அவசரமாக அவர்," இல்லை...இல்லை  சாப்பிட்ட  நினைவிருக்கிறது......" என்று வெள்ளைக் கொடி காட்டி என்னை சமாதானப் படுத்தி விட்டார். 

அதற்குப் பிறகு அவரை ஆளையே காணோம். எங்கே என்று  பார்த்தால்  கேமிராவை அட்ஜஸ்ட்  செய்து  கொண்டிருந்தார்.

"கேமிரா எதற்கு?" நான் கேட்க.....

"உப்புமா கொழுக்கட்டை  செய்யப் போகிறாயே  . அதற்குத் தான்...."
முதலில் புரியவில்லை. பின்னர் அவர் நக்கல் புரிந்தது.

" மாட்டிக் கொண்டீர்களா? கேமிராவுடன் வந்து விட்டீர்கள்.உப்புமா கொழுக்கட்டை செய்முறை  வீடியோ எடுத்து விடுங்கள்." நான் சொல்ல....

"அடக் கடவுளே....." அங்கலாய்த்துக் கொண்டே  வீடியோ  எடுத்து விட்டார்.

 இதோ வீடியோ......

பார்த்து உங்களின் 'comments'  மட்டுமல்ல , 'share'&'subscribe' செய்து விடுங்களேன்.
 



நன்றி ! நன்றி!நன்றி!

3 comments:

  1. அருமையான ருசியான சிற்றுண்டி
    இப்போது கல்யாண் வீடுகளில் கூட
    விரும்பிச் செய்கிறார்கள

    செய்முறையை மிகச் சிறப்பாக
    காணொளி மூலம்
    பகிர்ந்தது அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நாங்கள் எங்கள் வீட்டில் மாதம் ஒருமுறையாவது இதனைச் செய்வதுண்டு. இதனை நாங்கள் பிடி கொழுக்கட்டை எனச் சொல்வோம். வாய்க்கு ருசியாக பிரமாதமாக இருக்கும். இது இருமுறை ஹீட் செய்து செய்யப்படுவதால் உடம்புக்கும் வயிற்றுக்கும் நல்லது.

    காணொளி அருமை. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  3. 'நல்ல சொல்றீங்க. ஒரே பிரச்சனை, என்ன உபயோகப்படுத்தணும்கறதை இடுகையில போட்டு, எப்படிச் செய்யணும்னு வீடியோ போட்டால்தான், எப்போ பார்த்தாலும் நல்லாப் புரியும். இல்லைனா கஷ்டம்.

    மற்றபடி ரொம்ப நல்லா இருக்கு. (தெரிஞ்சாலும், உங்கள் செய்முறை என்னன்னு பார்த்துக்க முடியுது)

    ReplyDelete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்