Saturday, May 6, 2017

மாங்காய் பொரிச்ச குழம்பு.

மாங்காய் சீசன் என்பதால்மாங்காய் பொரிச்ச குழம்பு,  மதிய  உணவில்.. புளிப்பும் உரைப்புமாக  சுவையான குழம்பு  என்று என் மருமகள்  எனக்குப் புகழாரம்.

மாங்காயில் பச்சடி  செய்வோம், மாங்காய் ஊறுகாய்  தெரியும், ஏன்  மாங்காயில் சாம்பார் கூட கேள்வி பட்டிருக்கிறோம். இதென்ன மாங்காய் பொரிச்ச குழம்பு  என்று கேட்பவர்கள் கீழே இருக்கும் செய் முறை வீடியோவைப் பாருங்கள் .  நீங்களும் செய்து பார்த்து  சுவை எப்படியிருந்தது என்று எனக்கு சொல்ல மறக்காதீர்கள்.  சரியா?




"எங்களுக்குத் தெரியாதையா  நீ செய்திருக்கப் போகிறாய் ?" என்கிற சமையலுலக  ஜாம்பவான்கள் என் செய் முறை  சரி தானா என்று பார்த்து திருத்தங்கள் இருந்தால்  சொல்லுங்களேன்.

ஆனால் வீடியோவை  'like', 'share' & 'subscribe' செய்ய மறக்காதீர்கள் சரியா?

                                                                       நன்றி ! நன்றி!





9 comments:

  1. இனித்தான் செய்து பார்க்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார். அவசியம் செய்துபாருங்கள் மிக ருசியாக இருக்கும்.

      Delete
    2. உங்களுடைய கருத்தை You Tube Channel இல் வீடியோவிற்குக் கீழே உள்ள கருத்துப்பெட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி.

      Delete
  2. காணொளியும், சுத்தமான செய்முறையும் நாக்கில் நீரினை வரவழைத்துவிட்டன. மாங்காய் பொரிச்ச குழம்பு என கேட்பது மட்டுமே புதுமை. மாங்காயில் எது செய்தாலும் அது ருசியோ ருசியாகத்தான் இருக்கும். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. //மாங்காயில் எது செய்தாலும் அது ருசியோ ருசியாகத்தான் இருக்கும்.// " மாதா ஊட்டாத சோறையும் மாங்காய் ஊட்டி விடும்" என்கிற பழமொழி நினைவில் வந்து மோதுகிறது. உங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
    2. உங்களுடைய கருத்தை You Tube Channel இல் வீடியோவிற்குக் கீழே உள்ள கருத்துப்பெட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி.

      Delete
  3. ருசியான ரெசிபி பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய எல்லா வீடியோக்களையும், தொடர்ந்துஇந்தக் வருகை புரிந்து, பாராட்டுவதற்கு மிக்க நன்றி சார்.

      Delete
    2. உங்களுடைய கருத்தை You Tube Channel இல் வீடியோவிற்குக் கீழே உள்ள கருத்துப்பெட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி.

      Delete

உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்